தமிழ்க் கவிஞர் From Wikipedia, the free encyclopedia
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.
கண்ணதாசன் | |
---|---|
இந்திய அஞ்சல் தலையில் கண்ணதாசன் | |
பிறப்பு | முத்தையா 24 சூன் 1927 சிறுகூடல்பட்டி, திருப்பத்தூர் தாலுகா, ராம்நாட், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருப்பத்தூர் வட்டம், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 17 அக்டோபர் 1981 54) சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா | (அகவை
புனைபெயர் | காரை முத்துப்புலவர் வணங்காமுடி கனகப்பிரியன் பார்வதிநாதன் ஆரோக்கியசாமி |
தொழில் | கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர். |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா (1927-1981; இவரது மரணம்) |
கல்வி | 8ஆவது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அர்த்தமுள்ள இந்து மதம் இயேசு காவியம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சிறந்த வசனத்திற்கான தேசிய விருது 1968 குழந்தைக்காக சாகித்திய அகாதமி விருது 1980 சேரமான் காதலி |
துணைவர்கள் | பொன்னழகி (பொன்னம்மாள்) (திருமணம். 1950–1981; இறப்பு); 7 குழந்தைகள் பார்வதி (பார்வதியம்மாள்) (திருமணம். 1950–1981; இறப்பு); 7 குழந்தைகள் வள்ளியம்மை - 1976 முதல் 1981 வரை |
துணைவர் | 3 பொன்னம்மாள் பார்வதியம்மாள் வள்ளியம்மை |
பிள்ளைகள் | 15 கண்மணிசுப்பு கலைவாணன் மரு.இராமசாமி வெங்கடாசலம் அலமேலு தேனம்மை விசாலாட்சி காந்தி கமல் அண்ணாதுரை கோபி சீனிவாசன் ரேவதி கலைச்செல்வி விசாலி |
பெற்றோர் | சாத்தப்பச் செட்டியார் விசாலாட்சி ஆச்சி |
குடும்பத்தினர் | உடன்பிறந்தோர் :- 1)கண்ணம்மை 2)ஞானாம்பாள் 3)முத்தாத்தாள் 4)காந்திமதி 5)கண்ணப்பன் 6)சிறீனிவாசன் 7)சொர்ணாம்பாள் 8)சிவகாமி |
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார்.[சான்று தேவை] (மறைவு 4-2-1955[1] ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) [2] என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன்[3]
கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.[4] இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்[5],[6].
கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் [7] இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர்.[6]
ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார்.
கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் பிளவு பட்ட போது இந்திராகாந்தி பக்கம் நின்றார். அது தான் இன்றைய காங்கிரஸ் கட்சி . தான் இருந்த கட்சிகளின் தலைவர்களை , அவர்களது உண்மை சொரூபம் தெரிய வந்ததும் அந்தக் கட்சியில் இருந்து விலகிவிடுவார். " " உதவாத பல பாடல் உணராதோர் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும் மனமே " என்று தன் தவறுகளை ஒப்புக் கொண்டவர்.[8][9][10][11] அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை 1978இல் எம்.ஜி.ஆர் நியமித்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்[12] அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. [13] [14][15]
கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்துதொகுதிகள்
கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார்.[16] அவை:
மூன்றாம் பிறை திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும்
கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.