ஐங்கோணப் பட்டைக்கூம்பு
From Wikipedia, the free encyclopedia
வடிவவியலில், ஐங்கோணப் பட்டைக்கூம்பு (pentagonal pyramid) என்பது ஐங்கோண அடிப்பக்கம் கொண்ட பட்டைக்கூம்பு ஆகும். இதன் அடிப்பக்க ஐங்கோணத்தின் ஒவ்வொரு விளிம்பின் மீதும் ஒரு முக்கோண முகம் அமைந்திருக்கும். இந்த ஐந்து முக்கோண முகங்களும் ஐங்கோணப் பட்டைக்கூம்பின் மேலுச்சியில் சந்திக்கும். மற்ற பட்டைக்கூம்புகளைப் போல ஐங்கோணப் பட்டைக்கூம்பும் தன்-இருமப் பன்முகி.
ஐங்கோணப் பட்டைக்கூம்பு | |
---|---|
![]() | |
வகை | ஜான்சன் பட்டைக்கூம்பு J1 - J2 - J3 |
முகம் | 5 முக்கோணங்கள் 1 ஐங்கோணம் |
விளிம்பு | 10 |
உச்சி | 6 |
முகடு வடிவமைப்பு | 5(32.5) (35) |
இசுலாபிலிக் குறியீடு | ( ) ∨ {5} |
சீரொருமைக் குழு | C5v, [5], (*55) |
சுழற்சிக் குழு | C5, [5]+, (55) |
இரட்டைப் பன்முகி | தன்-இருமம் |
பண்புகள் | குவிவு |
Net | |
![]() |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6f/J2_pentagonal_pyramid.stl/640px-J2_pentagonal_pyramid.stl.png)
ஐங்கோணப்பட்டைக்கூம்பின் அடிப்பக்கம் ஒழுங்கு ஐங்கோணமாகவும் பக்கவாட்டு முக்கோண முகங்கள் சமபக்க முக்கோணங்களாகவும் இருந்தால் அது ஒழுங்கு ஐங்கோணப் பட்டைக்கூம்பு ஆகும். மேலும் ஜான்சன் திண்மங்களுள் (J2) ஒன்றாகவும் இருக்கும்.
இருபது முகியின் மேல்மூடிப்பகுதி ஐங்கோணப் பட்டைக்கூம்பாக அமைந்திருக்கும். ஐங்கோணப் பட்டைக்கூம்பு வடிவ மேல்மூடிப் பகுதி நீங்கலான இருபது முகியின் பாகம் சுழல்நீட்டிப்பு ஐங்கோணப் பட்டைக்கூம்பு (Gyroelongated pentagonal pyramid -J11) எனப்படும்.