![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/EST-coins-overview.jpg/640px-EST-coins-overview.jpg&w=640&q=50)
எஸ்தோனிய குரூன்
From Wikipedia, the free encyclopedia
குரூன் (சின்னம்: kr or ,-; குறியீடு: EEK), எஸ்டோனியா நாட்டின் முன்னாள் நாணயம். குரோன் என்னும் சொல் இலத்தீன் மொழியின் “குரோனா” என்னும் சொல்லில் இருந்து தொன்றியது. இதற்கு கிரீடம்/முடி என்று பொருள். டானிய குரோன், சுவீடிய குரோனா, நார்வே குரோன் போன்ற ஸ்கான்டினாவிய நாடுகளின் நாணயங்களின் பெயர்களும் இச்சொல்லிலிருந்தே தோன்றின. ஒரு குரூனில் நூறு சென்டிகள் உள்ளன. குரூன் என்ற சொல்லின் பன்மை வடிவம் “குரூனி”. எஸ்தோனிய குரூன் முதன் முதலில் 1928ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது எஸ்டோனியா சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் குரூன் நாணய முறை கைவிடப்பட்டு சோவியத் ரூபிள் நாணயம் புழக்கத்தில் இருந்தது. 1992ல் எஸ்டோனியா விடுதலை அடைந்தவுடன் குரூன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. எஸ்டோனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து விட்டதால் ஜனவரி 1, 2011 முதல் குரூன் கைவிடப்பட்டது. அதற்கு பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோ எஸ்டோனியாவின் நாணயமாகிவிட்டது.[2][3]
Eesti kroon | |
---|---|
![]() குரூன் நாணயங்கள் | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | EEK |
அலகு | |
பன்மை | குரூனி |
வேறுபெயர் | காகிதம் (Paper) |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | சென்ட் |
பன்மை | |
சென்ட் | சென்டி |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | 2, 5, 10, 25, 100, 500 குரூனி |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | 1, 50 குரூனி |
Coins | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 10, 20, 50 சென்டி, 1 குரூனி |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 5 சென்டி, 5 குரூனி |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | ![]() |
வெளியீடு | |
நடுவண் வங்கி | எஸ்டோனிய வங்கி |
இணையதளம் | www.bankofestonia.info |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 2.8% |
ஆதாரம் | ஐரோப்பிய மத்திய வங்கி, மே 2010 |
ஐ.ஒ மாற்று விகித வழிமுறை (ERM) | |
முதல் ஆண்டு | 28 ஜூன் 2004 |
முதல் நிலையான விகிதம் | 31 டிசம்பர் 1998 |
1 € = | 15.6466 குரூனி |
பேண்ட் | மாறுவதில்லை[1] |