எக்ஸ்-மென் (திரைப்படத் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
எக்ஸ்-மென் (X-Men) என்பது அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படத் தொடர் ஆகும். இது ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோரால் இதே பெயரில் உருவாக்கப்பட்டு மார்வெல் வரைக்கதை புத்தகத்தில் வெளியான ஒரு மீநாயகன் குழு ஆகும். இந்த திரைப்படத் தயாரிப்பிற்கான உரிமையை 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் 1994 ஆம் ஆண்டில் பெற்றது.
எக்ஸ்-மென் | |
---|---|
தயாரிப்பு | லாரன் ஷுலர் டோன்னர் சைமன் கின்பெர்க் |
விநியோகம் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் மார்வெல் மகிழ்கலை டோனர்ஸ் கம்பெனி |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
ஆக்கச்செலவு | Total (13 திரைப்படங்கள்): $$1.748 பில்லியன் |
மொத்த வருவாய் | Total (13 திரைப்படங்கள்): $6.083 பில்லியன் |
பிறையன் சிங்கர் என்பவர் இயக்கத்தில் எக்ஸ்-மென் என்ற முதல் திரைப்படம் 2000 ஆம் ஆண்டும் அதன் தொடர்ச்சியாக எக்ஸ்-மென் 2 என்ற படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. அதை தொடர்ந்து எக்ஸ்-மென்: த லாஸ்ட் ஸ்டேண்ட் என்ற மூன்றாம் பாகம் பிரெட் ரட்னர் என்பவர் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளியானது.
இந்த திரைப்படத்தில் இருந்து வெவ்வேறு கிளை கதாபாத்திரங்களை மையமாக வைத்து மூன்று வோல்வரின் படங்கள் (வோல்வரின் (2009), வோல்வரின்-2 (2013), லோகன் (2017), நான்கு புதிய எக்ஸ்-மென் படங்கள் (எக்ஸ்-மென்: பாஸ்ட் கிளாஸ் (2011), எக்ஸ்-மென்: பாஸ்ட் கிளாஸ் (2014), எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ் (2016), எக்ஸ்-மென்: டார்க் பீனிக்ஸ் (2019) மற்றும் இரண்டு டெட்பூல் படங்களை (டெட்பூல் (2016), டெட்பூல் 2 (2018) போன்றவை வெளியானது.
இதுவரைக்கும் பதிமூன்று படங்கள் வெளியான நிலையில், எக்ஸ்-மென் திரைப்படத் தொடர் உலகளவில் 6 பில்லியன் டாலர்களை வசூலித்து ஏழாவது முறையாக அதிக வசூல் செய்த திரைப்படத் தொடராக திகழ்கின்றது