உருசிய தூரகிழக்கு நடுவண் மாவட்டம்
உருசிய நிர்வாகப் பிரிவு From Wikipedia, the free encyclopedia
உருசிய நிர்வாகப் பிரிவு From Wikipedia, the free encyclopedia
தூர கிழக்கு நடுவண் மாவட்டம் (Far Eastern Federal District,உருசியம்: Дальневосто́чный федера́льный о́круг, Dalnevostochny federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் மிகப் பெரியது ஆகும். என்றாலும் குறைந்த மக்கள் தொகை கொண்டது. 2010 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 8,371,257 (75.5% நகர்ப்புறம் [3] ) ஆகும். முழு நடுவண் மாவட்டமும் உருசியாவின் தூரக் கிழக்கில், ஆசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
தூரகிழக்கு நடுவண் மாவட்டம்
Дальневосточный федеральный округ | |
---|---|
உருசியாவில் தூரகிழக்கு நடுவண் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | உருசியா |
உருவாக்கம் | 18 மே 2000 |
நிர்வாக மையம் | விளாதிவசுத்தோக் |
அரசு | |
• சனாதிபதியின் தூதர் | யூரி டிரூட்னெவ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 69,52,600 km2 (26,84,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 1st of 8 (40,6% of the country) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 83,71,257 |
• தரவரிசை | 8th of 8 (5,6 % of the country) |
• அடர்த்தி | 1.2/km2 (3.1/sq mi) |
• நகர்ப்புறம் | ??% |
• நாட்டுப்புறம் | ??% |
Time zones | |
புரியாத்தியா | ஒசநே+08:00 (Irkutsk Time) |
அமூர் மாகாணம், சபைக்கால்சுக்கி பிரதேசம் மற்றும் சகா குடியரசின்ன் பெரும்பகுதி (excluding districts in UTC+10:00 and UTC+11:00 time zones) | ஒசநே+09:00 (Yakutsk Time) |
யூதர்களின் தன்னாட்சி மாகாணம், கபரோவ்ஸ்க் பிரதேசம், பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு மற்றும் சகா குடியரசின் ஓமியாகோன்ஸ்கி, உஸ்ட்-யான்ஸ்கி மற்றும் வெர்கோயன்ஸ்கி மாவட்டங்கள் | ஒசநே+10:00 (Vladivostok Time) |
மகதான் மாகாணம், சகாலின் மாகாணம், மற்றும் சகா குடியரசின் அபிஸ்கி, அலைகோவ்ஸ்கி, மாம்ஸ்கி, நிஸ்னெகோலிம்ஸ்கி, ஸ்ரெட்னெகோலிம்ஸ்கி மற்றும் வெர்க்னெகோலிம்ஸ்கி மாவட்டங்கள் | ஒசநே+11:00 (Magadan Time) |
சுகோத்கா மற்றும் கம்சாத்கா பிரதேசம் | ஒசநே+12:00 (Kamchatka Time) |
கூட்டாட்சிப் பகுதிகள் | 11 contained |
பொருளாதாரப் பகுதிகள் | 1 contained |
ம.மே.சு. (2018) | 0.810[2] very high · 4th |
இணையதளம் | DFO.gov.ru |
தூர கிழக்கு நடுவண் மாவட்டமானது 18, மே, 2000 அன்று சனாதிபதி விளாடிமிர் புடினால் நிறுவப்பட்டது. தற்போதய சனாதிபதி தூதராக யூரி ட்ரூட்னெவ் உள்ளார். 2018 நவம்பரில், புரியாத்தியா மற்றும் சபைக்கால்சுக்கி பிரதேசம் ஆகியவை நடுவண் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன.[4] தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தின் நிர்வாக மையமானது கபரோவ்ஸ்கிலிருந்து விளாதிவசுத்தோக்கிற்கு 2018 திசம்பரில் மாற்றப்பட்டது.[5]
# | கொடி | கூட்டாட்சி அமைப்பு | பரப்பளவு கிமீ 2இல் | மக்கள் தொகை (2010) | தலைநகரம் / நிர்வாக மையம் |
---|---|---|---|---|---|
1 | அமூர் மாகாணம் | 361,900 | 830,103 | பிளாகோவெஷ்சென்ஸ்க் | |
2 | புரியாத்தியா குடியரசு | 351,300 | 971,021 | உலன்-உதே | |
3 | யூதர்களின் தன்னாட்சி மாகாணம் | 36,300 | 176,558 | பீரோபிட்ஜான் | |
4 | சபைக்கால்சுக்கி பிரதேசம் | 431,900 | 1,107,107 | சிதா | |
5 | கம்சாத்கா பிரதேசம் | 464,300 | 322,079 | பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி | |
6 | மகதான் மாகாணம் | 462,500 | 156,996 | மகதன் | |
7 | பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு | 164,700 | 1,956,497 | விளாதிவசுத்தோக் | |
8 | சகா குடியரசு | 3,083,500 | 958,528 | யாகுட்ஸ்க் | |
9 | சகாலின் மாகாணம் | 87,100 | 497,973 | யுஷ்னோ-சகலின்ஸ்க் | |
10 | கபரோவ்ஸ்க் பிரதேசம் | 787,600 | 1,343,869 | கபரோவ்ஸ்க் | |
11 | சுகோத்கா தன்னாட்சி வட்டாரம் | 721,500 | 50,526 | அனதிர் |
தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தில் 82 நகரங்கள் உள்ளன. இவற்றில் 14 நகரங்களில் 75,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.