From Wikipedia, the free encyclopedia
சபைக்கால்சுக்கி பிரதேசம் (Zabaykalsky Krai (உருசியம்: Забайкальский край, சபைக்கால்ஸ்கி கிராய்) என்பது உருசிய கூட்டமைப்பு ஆட்சிப் பகுதி (கிராய்) ஆகும். இது ஒரு பிரச்சனையினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சித்தா மாகாணம் மற்றும் அகின்-புர்வாத் தன்னாட்சி ஓர்க் ஆகிய பகுதிகளை ஒன்றாக இணைத்ததன் மூலமாக 2008 மார்ச் 1 அன்று இப்பிரதேசம் புதியதாக உருவாக்கப்பட்டது. 2010 ஆண்டைய மக்கள் கணக்கெடுப்பின்படி பிரதேசத்தின் மக்கள் தொகை 1,107,107 ஆகும்.[7]
சபைக்கால்சுக்கி பிரதேசம் Zabaykalsky Krai | |
---|---|
கிராய் | |
Забайкальский край | |
பண்: none[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | சைபீரியா[2] |
பொருளாதாரப் பகுதி | கிழக்கு சைபீரியா[3] |
தலைநகரம் | சித்தா |
அரசு | |
• நிர்வாகம் | சட்ட மன்றம்[4] |
• ஆளுநர்[4] | கோன்ஸ்டெட்னட் இல்கோவிஸ்கி[5] |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,31,500 km2 (1,66,600 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 10வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[7] | |
• மொத்தம் | 11,07,107 |
• மதிப்பீடு (2018)[8] | 10,72,806 (−3.1%) |
• தரவரிசை | 47வது |
• அடர்த்தி | 2.6/km2 (6.6/sq mi) |
• நகர்ப்புறம் | 65.9% |
• நாட்டுப்புறம் | 34.1% |
நேர வலயம் | ஒசநே+9 ([9]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-ZAB |
அனுமதி இலக்கத்தகடு | 75, 80 |
OKTMO ஐடி | 76000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[10] |
இணையதளம் | www.забайкальскийкрай.рф |
இந்தக் கிராய் வரலாற்று ரீதியான பிராந்தியமான திரான்ஸ்பைக்காலா பகுதியில் அமைந்துள்ளது. இப்பிராந்தியம் உருசியாவின் சர்வதேச எல்லையில் பிற நாடுகளுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. சீனாவுடன் 998 கிமீ எல்லையும், மங்கோலியாவுடன் 868 கிமீ எல்லையையும், உள்நாட்டில் இர்கூத்சுக் மாகாணம் மற்றும் அமூர் மாகாணம், புர்த்தியா குடியரசு மற்றும் சகா குடியரசு ஆகியவற்றை தன் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
இப்பிராந்தியத்தில் சுமார் 150-35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் மனிதன் இருந்ததாக தடயங்கள் கிடைக்கின்றன. துவக்கக் கால ஆதாரங்கள் பழங்கால ஆறான கிராவில்ஸ் கைர்ஷிலுங்கி ( கிலோக் ஆற்றின் துணை ஆறு) அருகில் உள்ள சிட்டா நகரம் மற்றும் சைக்கியா ஆற்றின் அருகில் உள்ள நகரான உஸட்-மன்ஜா ஆகிய இடங்களில் கிடைத்துள்ளது.
பைக்கால் பகுதியில் மங்கோலிக்-தொடர்பான அடுக்கில் கல்லறைக் கலாச்சார நினைவுச் சின்னங்கள் கிடைத்துள்ளன.[11] சபேகலஸ்கே பிரதேசத்தை கி.மு 209 முதல் கி.பி 93 வரையிலான காலகட்டத்தில் க்சியாங்னு பேரரசு ஆண்டது. அதன்பிறகான காலகட்டத்தில் மங்கோலிய க்சியான்பெல் நாடு (93-234), ரௌரன் பேரரசு (330-555), மங்கோலிய போரரசு (1206-1368), வடக்கு யுவான் (1368-1691) ஆகியன ஆண்டன.[12]
இடைக்காலத்தில் மங்கோலிய பழங்குடியின மக்களான மெர்கிட், தைச்சூடு, ஜலாய்ரி, கமங் மங்கோல் ஆகிய மக்கள் பிரதேசத்தில் குடியேறினர்.[12] 17 ஆம் நூற்றாண்டில், ஓரளவு அல்லது முழுவதும் மங்கோலியம் பேசும் தாவுர் மக்கள் ஷைகா, மேல் ஆமூர், புரியா ஆற்றுப் பகுதி ஆகிய பிரதேசங்களில் வாழ்துவந்தனர். இம்மக்கள் இப்பிரதேசத்துக்கு தாவுரிகா என்ற பெயரை அளித்தனர் இது திரான்ஸ்பைக்கா எனவும் அழைக்கப்படுகிறது. தற்போது இப்பிரதேசம் தற்போதைய உருசியாவின் பைக்காரா ஏரியின் கிழக்கில் உள்ளது.
சீதா ஒப்லாஸ்து ஆளுநராக இருந்த ரவில் கனியதுலின் சபைக்கால்சுக்கி பிரதேசத்தின் ஆளுனராக பெரும்பான்மை ஆதரவுடன் 2008 பெப்ரவரி 5 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 மார்ச் 1 அன்று பதவி ஏற்றார்.[13]
மக்கள் தொகையில் பெரும்பாலும் உருசியர்கள் மற்றும் புர்யாத் ஆகியோருடன் ஓரளவு உக்ரேனியர் மற்றும் கொஞ்சம் இவன்ஸ்க் ஆகிய இனத்தவர் வாழ்கின்றனர். பிரதேசத்தின் தலைநகரில், 1,000 யூதர்கள் வசிக்கின்றனர். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி,[7] மக்கள் தொகையில் உருசியர்கள் 89.9% உள்ளனர். புர்யாதர் 6.8%. உக்கேனியர் (0.6%), தடார்கள் (0.5%), பெலருசியர் (0.2%), அசீரியர் (0.18%), இவனக்கர் (0.1%) ஆகிய மக்கள் வாழ்கின்றனர். மக்கள் தொகை கணக்கெடுப்பில் 19,981 மக்கள் தங்கள் இனம்குறித்து தெரிவிக்கவில்லை.[16]
தரவு:[17]
மொத்த கருத்தரிப்பு விகிதம்:[19] 2009 - 1.89 | 2010 - 1.87 | 2011 - 1.87 | 2012 - 2.00 | 2013 - 2.01 | 2014 - 2.08 | 2015 - 2.04(e)
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி[20] பிரதேசத்தில் 24.6% பேர் Rஉருசிய மரபு வழி திருச்சபை கிருத்துவர், 6.25% பேர் பௌத்தர், 6% பேர் திருசபை சாராத கிருத்தவர் (சீர்திருத்த கிருத்தவர் தவிர), 2% பேர் கிழக்கு மரபு வழி கிருத்துவ சபையை நம்புபவர்கள் பிற திருச்சபைகளை நம்பாத, உறுப்பினர் அல்லாத (உருசியர் அல்லாதவர்கள்) கிழக்கு மரபுவழி கிருத்தவர்கள். மிதமுள்ள, 28% பேர் இறை நம்பிக்கை உள்ள ஆனால் சமய நம்பிக்கை அற்றவர்கள், 17% பேர் நாத்திகர், மற்றும் 16.15% பேர் பிற சமயங்களை சார்ந்தவர்களாகவோ அல்லது தங்கள் சமயம் குறித்து கணக்கெடுப்பின்போது தெரிவிக்காதவர்கள்.[20]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.