இரசுத்து
ஈரான் நகரம் / From Wikipedia, the free encyclopedia
இராசுத்து(Rasht (பாரசீக மொழி: رشت, romanized: Raŝt [ɾæʃt] (கேட்கⓘ); Gilaki: Rəsht; இதனைக் குறிக்கும், பிற ரோமானியா சொற்கள்: Resht ;Rast, பிரெஞ்சு மொழிச் சொல்லான, Recht என்ற சொல்லினைப் போலவும், பழைய இடாய்ச்சு மொழியில் எழுதப்பட்டுள்ள கையெழுத்துப் பிரதிகளில் உள்ள சொல்லைப் போலவும் எழுத்துகளில் எழுதப் படுகின்றன.[2] இந்த இராசுத்து நகரம் தான், ஈரான் நாட்டிலுள்ள முப்பத்தொன்று மாகாணங்களில் ஒன்றான, கீலான் மாகாணத்தின், தலைநகரம் ஆக உள்ளது. "மழையின்நகரம்" (شهر باران, Ŝahre Bārān) எனவும், இந்நகரம் அழைக்கப் படுகிறது. 2011 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 24ந்தேதி அறிவிக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி, இதன் மக்கள்தொகையானது, 639,951 நபர்களைக் கொண்டிருந்தது.[3] இந்த நகரத்தில் மக்கள், மற்ற எந்த ஒரு ஈரான் நகரத்தினை விடவும் நெருக்கமாகவும், அடர்வாகவும் வசிக்கின்றனர். இரவு, பக்கல் எந்நேரத்திலும் இந்நகரத்தில் வாழும் மக்கள் இயங்கி வருவதைக் காணலாம். எனவே, இதனைத் தூங்கா நகரம் என்றும் அழைப்பர்.
Raŝt
Rəsht (Gilaki) | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மழை நகரம்,இராசுத்துச் சொர்க்கம் | |
ஆள்கூறுகள்: 37°16′51″N 49°34′59″E | |
Country | ஈரான் |
Province | Gilan |
County | Rasht |
Bakhsh | Central |
அரசு | |
• Mayor | Ali Baharmast |
• City Council Chairman | Amir Hossein Alavi |
பரப்பளவு | |
• நகரம் | 180 km2 (70 sq mi) |
மக்கள்தொகை (2016 Census) | |
• நகர்ப்புறம் | 6,79,995 [1] |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
இடக் குறியீடு | 013 |
இணையதளம் | www |
ஈரானின் காஸ்பியன் கடல் கடற்கரையில்,இராசித்து என்ற இந்த மிகப்பெரிய நகரம் அமைந்நுள்ளது. இதன் பந்தர்-இ அன்சாலி துறைமுகத்தைப் பயன்படுத்தி, காகேசியா, இரஷ்யா மற்றும் ஈரானுக்கு இடையிலான, முக்கிய வர்த்தகமும், வாணிபமும் நடைபெறும் நடுப்பகுதியாக, இந்நகரம் திகழ்கிறது. இராசித்து, ஈரானின் முக்கிய சுற்றுலா செயற்களமாகவும் செயற்படுகிறது. இந்நகருக்கு, அருகிலுள்ள மலைகளில் உள்ளலின் ரிசார்ட் என்பதும், காஸ்பியனின் கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடங்களாக இருக்கின்றன.