![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/Kuala_Lumpur_Malaysia-Istana_Negara-Jalan-Duta-01.jpg/640px-Kuala_Lumpur_Malaysia-Istana_Negara-Jalan-Duta-01.jpg&w=640&q=50)
இசுதானா நெகாரா மலேசியா
மலேசிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ இல்லம் / From Wikipedia, the free encyclopedia
இசுதானா நெகாரா (மலாய்: Istana Negara; ஆங்கிலம்: National Palace); என்பது மலேசிய அரசர் (Yang di-Pertuan Agong) அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இது வடமேற்கு கோலாலம்பூரில் உள்ள டாமன்சாரா துவாங்கு அப்துல் ஆலிம் சாலை (Jalan Tuanku Abdul Halim); எனும் டூத்தா சாலையில் (Jalan Duta) அமைந்துள்ளது.[1]
விரைவான உண்மைகள் இசுதானா நெகாரா மலேசியாIstana Negara Malaysia National Palace of Malaysia, பொதுவான தகவல்கள் ...
இசுதானா நெகாரா மலேசியா Istana Negara Malaysia National Palace of Malaysia | |
---|---|
![]() | |
மலேசியாவில் அமைவிடம் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | அரண்மனை |
கட்டிடக்கலை பாணி | மலாய் இசுலாமியம் மேற்கத்திய கலை |
நகரம் | கோலாலம்பூர் |
நாடு | ![]() |
ஆள்கூற்று | 3°7′47″N 101°33′44″E |
தற்போதைய குடியிருப்பாளர் | யாங் டி பெர்துவான் அகோங் |
அடிக்கல் நாட்டுதல் | நவம்பர் 2007 |
கட்டுமான ஆரம்பம் | நவம்பர் 2007 |
நிறைவுற்றது | செப்டம்பர் 2011 |
துவக்கம் | 15 நவம்பர் 2011 |
செலவு | RM812 மில்லியன் |
உரிமையாளர் | மலேசிய அரசாங்கம் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | மலேசிய பொதுப்பணித்துறை Kumpulan Seni Reka Sdn. Bhd. |
முதன்மை ஒப்பந்தகாரர் | மலேசிய பொதுப்பணித்துறை Maya Maju Sdn. Bhd. |
மூடு
விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், அமைப்பு ...
மலேசிய தேசிய அரண்மனை | |
![]() | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 31 ஆகத்து 1957; 66 ஆண்டுகள் முன்னர் (1957-08-31) |
ஆட்சி எல்லை | மலேசியா |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
ஆண்டு நிதி | RM13.53 மில்லியன் (2016) |
அமைப்பு தலைமை |
|
மூல நிறுவனம் | மலேசியப் பிரதமர் துறை |
வலைத்தளம் | www |
மூடு
மத்திய கோலாலம்பூரில் வேறு வளாகத்தில் அமைந்து இருந்த பழைய இசுதானா நெகாராவிற்குப் பதிலாக இந்த அரண்மனை 2011-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[2]
அரண்மனை வளாகம் 97.65 எக்டர் பரப்பளவைக் கொண்டு உள்ளது. இந்த வளாகத்தில் 22 குவிமாடங்கள் உள்ளன. மற்றும் சாதாரண பகுதி (Formal Component); அரச பகுதி (Royal Component); மற்றும் நிர்வாகப் பகுதி (Administration Component) என மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.[3]