பாடகர் From Wikipedia, the free encyclopedia
ஆஷா போஸ்லே (Asha Bhosle, பிறப்பு:8 செப்டம்பர் 1933) இந்தியப் பின்னணிப் பாடகரும், தொழில்முனைவோரும், நடிகையும், தொலைக்காட்சி ஆளுமையுமாவார். பன்முகத்தன்மைக்குப் பெயர் பெற்ற இவர், இந்தித் திரைப்படத்துறையின் மிகச்சிறந்த, மிகவும் செல்வாக்குமிக்க பாடகர்களில் ஒருவராக ஊடகங்களில் விவரிக்கப்படுகிறார். எட்டுத் தலைமுறைகளுக்கும் மேலாக தனது வாழ்க்கையில் பல்வேறு இந்திய மொழிகளில் திரைப்படங்களிலும் ஆவணப்படங்ளிலும் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். மேலும் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா, நான்கு பி. எஃப். ஜே. ஏ விருதுகள், பதினெட்டு மகாராட்டிர மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். கூடுதலாக கிராமி விருது பெற்ற இவர் 2000 இல், திரைப்படத் துறையில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகெப் பால்கே விருதால் கௌரவிக்கப்பட்டார். 2008 இல், நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த பத்ம விபூஷண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது. 2011 இல் கின்னஸ் உலக சாதனை புத்தகம் போசுலேவை இசை வரலாற்றில் அதிகப் பாடல்களைப் பதிவு செய்யப்பட்ட கலைஞராக அங்கீகரித்தது.
ஆஷா போஸ்லே Asha Bhosle | |
---|---|
2015இல் போசுலே | |
பிறப்பு | ஆசா மங்கேசுகர் 8 செப்டம்பர் 1933 கோர், சாங்கிலி, சாங்கிலி சமஸ்தானம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (இன்றைய மகாராட்டிரம், இந்தியா) |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1943–நடப்பு |
வாழ்க்கைத் துணை | கன்பத்ராவ் போஸ்லே (தி. 1949; செப்டம்பர். 1960; இறப்பு 1966) |
பிள்ளைகள் | (வர்சா போசுலே) உடன் 3 பேர் |
விருதுகள் |
|
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் | |
இசைக்கருவி(கள்) | குரலிசை |
போசுலே பின்னணிப் பாடகி இலதா மங்கேசுகரின் தங்கையும், மங்கேசுகர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் முக்கியமான நபருமாவார். இவரது சோப்ரானோ குரல் வரம்பிற்கு புகழ்பெற்றவர். இவரது பன்முகத்தன்மைக்கு பெரும்பாலும் பாராட்டப்படுகிறார். போசுலேவின் படைப்புகளில் திரைப்பட இசை, பரப்பிசை, கஜல்கள், பஜனைகள், பாரம்பரிய இசை, நாட்டுப்புறப் பாடல்கள், கவ்வாலி, இரவீந்திர சங்கீதம் ஆகியவையாகும்.[8][9][10][11] இந்தியைத் தவிர, 20 இற்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் பாடியுள்ளார்.[12] 2013 இல், மாய் படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமாகி, இவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார். 2006 இல், போசுலே தனது வாழ்க்கையில் பன்னிரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். இந்த எண்ணிக்கை பல ஆதாரங்களால் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது.[13][12][14]
ஆசா மங்கேசுகர், மராத்தி, கொங்கணி மொழியைச் சேர்ந்த தீனநாத் மங்கேசுகரின் இசைக் குடும்பத்தில், சௌரில் உள்ள சிறிய குக்கிராமமான கோவரில், சௌராத்திலுள்ள சாங்கிலி (தற்போதைய மகாராட்டிராவில்) பிறந்தார். தீனநாத் ஒரு மராத்தி இசை மேடை நடிகரும் பாரம்பரியப் பாடகருமாவார். இவருடைய மனைவி செவந்தி குசராத்தைச் சேர்ந்தவர். ஆசாவுக்கு ஒன்பது வயதாக இருந்தபோது, இவரது தந்தை இறந்தார். இவரது குடும்பம் புனே கோலாப்பூருக்கும் பின்னர் மும்பைக்கும் குடிபெயர்ந்தது. இவரும் இவரது மூத்த சகோதரி இலதா மங்கேசுகரும் தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்காக திரைப்படங்களில் பாடவும் நடிக்கவும் தொடங்கினர். மராட்டியத் திரைப்படமான மஜா பால் (1943) படத்திற்காக தனது முதல் திரைப்படப் பாடலான 'சலா சலா நவ் பாலா' பாடலைப் பாடினார். படத்திற்கான இசையை தத்தா தாவ்சேகர் இசையமைத்தார். ஹன்ஸ்ராஜ் பெஹலின் சுனாரியா (1948) படத்திற்காக "சவான் ஆயா" பாடலைப் பாடியபோது இவர் இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். [15] இவரது முதல் தனி இந்தித் திரைப்படப் பாடல் ராத் கி ரானி (1949) திரைப்படத்தில் அமைந்தது.
16 வயதில், இவர் 31 வயதான கண்பத்ராவ் போசுலேவை, தனது குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டார்.[16]
1960களின் முற்பகுதியில், கீதா தத், சம்சாத் பேகம், இலதா மங்கேசுகர் போன்ற பிரபல பின்னணிப் பாடகிகள், பெண் கதாநாயகிகளுக்கும், பெரிய படங்களில் பாடுவதிலும், ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் மறுத்த பணிகளை ஆசா பெறுவார், வில்லி நடிகைகள், வாம்பயர்களுக்காக பாடுவார் அல்லது குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடுவார். 1950களில், இந்தித் திரைப்படங்களில் பெரும்பாலான பின்னணிப் பாடகர்களை விட இவர் அதிகப் பாடல்களைப் பாடினார். இவற்றில் பெரும்பாலானவை குறைந்த பொருட்செலவில் பி-அல்லது சி-பட்டியல் படங்களில் இருந்தன. இவரது ஆரம்பகால பாடல்களுக்கு அல்லா ரக்கா, சஜ்ஜத் உசேன், குலாம் முகமது ஆகியோர் இசையமைத்தனர். மேலும் இப்பாடல்களில் பெரும்பாலானவை சரியாக ஓடவில்லை.[15] சஜ்ஜத் உசேன் இசையமைத்த சாங்டில் திரைப்படத்தில் (1952) பாடலைப் பாடிய இவர் நியாயமான அங்கீகாரத்தைப் பெற்றார். இதன் விளைவாக, திரைப்பட இயக்குநர் பிமல் ராய் இவருக்கு பரினிதா (1953) திரைப்படத்தில் பாட வாய்ப்பு வழங்கினார். பூட் போலிஷ் (1954) இல் முகமது ரபியுடன் "நான்ஹே முன்னே பச்சே" பாடலைப் பாடுவதற்கு இராஜ் கபூர் ஒப்புக்கொண்டதன் மூலம் பிரபலமானார்.[17]
ஓ. பி. நாயர் 1956 இல் சி. ஐ. டி. திரைப்படத்தில் ஆசாவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். பி. ஆர். சோப்ரா 1957இன் நயா தௌர் என்ற திரைப்படத்தில் இவர் முதல் வெற்றி பெற்றார். சாகிர் இலுதியான்வி எழுதிய "மாங் கே சாத் தும்காரா", "சதி காத் பதானா", "உதன் சப் சப் சுல்பெய்ன் தேரி" போன்ற இரஃபியுடன் இவர் பாடிய காதல் பாடல்கள் இவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. ஒரு படத்தின் முன்னணி நடிகைக்காக இவர் அனைத்துப் பாடல்களையும் பாடியது இதுவே முதல் முறையாகும். சோப்ரா தனது பிற்காலத் தயாரிப்புகளில் கும்ரா (1963), வக்த் (1965), கம்ராசு (1967), ஆத்மி ஔர் இன்சான் (1966), துண்ட் (1973) உள்ளிட்ட பலவற்றிற்காக இவரை அணுகினார். போசுலேவுடன் நாயரின் இணைவு எதிர்கால வெற்றிக்கு வழிவகுத்தது. படிப்படியாக, இவர் தனது மதிப்பை நிலைநிறுத்தினார். மேலும் எஸ். டி. பர்மன், இரவி போன்ற இசையமைப்பாளர்களின் ஆதரவைப் பெற்றார். 1970 களில் போசுலேவும் நாயரும் ஒரு தொழில்முறையாகவும் தனிப்பட்ட வகையிலும் பிரிந்தனர்.[18]1966 இல், இசையமைப்பாளர் ஆர். டி. பர்மனின் முதல் ஒலிப்பதிவுகளில் ஒன்றான தீசுரி மஞ்சில் திரைப்படத்திற்கான காதல் பாடல்கள் போசுலேவின் பாடும் திறனால் மக்கள் பாராட்டைப் பெற்றது. "ஆஜா ஆஜா" என்ற நடனப்பாடலை இவர் முதன்முதலில் கேட்டபோது, இந்த மேற்கத்திய இசையை தன்னால் பாட முடியாது என்று உணர்ந்ததாக கூறப்படுகிறது. பர்மன் இசையை மாற்ற முன்வந்தபோது, இவர் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, பத்து நாட்கள் ஒத்திகைக்குப் பிறகு பாடலைப் பாடி முடித்தார். மேலும் "ஆஜா ஆஜா", "ஓ கசீனா சுல்போன் வாலி", "ஓ மேரே சோனா ரே" போன்ற பிற பாடல்களில் (இரஃபி) உடனான மூன்று காதல் பாடல்களும் வெற்றிகரமாக அமைந்தன. படத்தின் முன்னணி நடிகரான சம்மி கபூர் ஒருமுறை, -"எனக்காக பாட முகமது இரஃபி இல்லாதிருந்தால், ஆசா போசுலேவை அப்பணியைச் செய்ய வைத்திருப்பேன்". என்று மேற்கோள் காட்டினார். பர்மனுடன் போசுலே இணைந்து பணியாற்றியது பல வெற்றிகளுக்கும் திருமணத்திற்கும் வழிவகுத்தது. 1960-70 களின் போது, கிந்த் திரைப்பட நடிகையும் நடனக் கலைஞருமான கெலனின் குரலாக இருந்தார். கெலனை வைத்து "ஓ கசீனா சுல்ஃபன் வாலி" பாடல் படமாக்கப்பட்டது. கெலன் பாடல்பதிவு அமர்வுகளில் கலந்து கொள்வார், இதனால் ஹெலன் பாடலை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப நடனத்தை திட்டமிட முடிந்தது என்று கூறப்படுகிறது.[19] இவர்களின் பிற பிரபலமான பாடல்களில் "பியா து அப் தோ ஆஜா" (கேரவன்), "யே மேரா தில்" (டான்) போன்ற பாடல் அடங்கும்.
1995 இல், 62 வயதான போசுலே நடிகை ஊர்மிளா மடோண்த்கருக்காக ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த ரங்கீலா திரைப்படத்தில் பாடினார். இப்பாடல் பதிவில் "தன்கா தன்கா", "ரங்கீலா ரே" போன்ற பாடல்கள் இடம்பெற்றன. ரகுமானுடன் இவர் பல பாடல்களைப் பதிவு செய்தார். 2000களில், போசுலேவின் பல பாடல்கள் தரவரிசையில் வெற்றி பெற்றன. இதில் லகான் (2001) திரைப்படத்திலிருந்து "ராதா கைசே நா சாலே" பியார் துனே க்யா கியா (2001) திரைப்படத்திலிருந்து "கம்பக்த் இசுக்" (பிஃல்கால் (2002) திரைப்படத்திலிருந்து யே லம்பா, லக்கி (2005) திரைப்படத்திலிருந்து லக்கி லிப்சு போன்ற பாடல்களாகும். அக்டோபர் 2004 இல், 1966 முதல் 2003 வரை வெளியிடப்பட்ட ஆவணப்படங்களுக்கும், இந்தித் திரைப்படங்களுக்கும் போசுலே பதிவு செய்த பாடல்களின் தொகுப்பை ஆவணப்படுத்தி தி வெரி பெசுட் ஆஃப் ஆசா போசுலே, தி குயின் ஆஃப் பாலிவுட், என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
2012 இல் போசுலே சுர் கேசத்ராவை நடுவராக நியமித்தார்.
2013 இல், போசுலே தனது 79 வயதில் மாய் படத்தில் தலைப்பு வேடத்தில் அறிமுகமானார். ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு தனது குழந்தைகளால் கைவிடப்பட்ட 65 வயது தாயின் கதாபாத்திரத்தில் போசுலே நடித்தார். இவரது நடிப்பிற்காகவும் விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். [20][21]
மே 2020 இல், போசுலே "ஆசா போசுலே அதிகாரப்பூர்வம்" என்ற பெயரில் தனது யூடியூப் அலைத்தடம் தொடங்கினார்.
1980களின் முற்பகுதியில் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா ஆசாவின் குரலைப் பயன்படுத்தத் தொடங்கினார். இவர்களின் ஆரம்பகால கூட்டணி மூன்றாம் பிறை (1983 இல் இந்தியில் சத்மா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்ட) திரைப்படத்தில் அமைந்தது. பெரும்பாலும் 1980களின் பிற்பகுதி, 1990களின் முற்பகுதி வரை இவர்களின் கூட்டணி தொடர்ந்தது. இக்காலகட்டத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க பாடல் 1987 இல் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் "செண்பகமே செண்பகமே" பாடலாகும். 2000 இல், கமல்ஹாசனின் அரசியல் படமான ஹே ராம் படத்திற்காக ஆசா தலைப்புப் பாடலைப் பாடினார். தமிழில் "நீ பார்த்த பார்வை" என்ற பாடலும், இந்தியில் ஜான்மோன் கி ஜிவாலா என்ற பாடலும் (அல்லது அபர்னாவின் தலைப்புப் பாடல்) பாடகர் ஹரிஹரனுடன் காதல் பாடலாக இருந்தது.
ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த ரங்கீலா (1994) திரைப்படத்தில் ஆசாவின் "மறுபிரவேசம்" மூலம் பாராட்டப்படுகிறார். "தன்கா தன்கா", "ரங்கீலா ரே" போன்ற பாடல்கள் தரவரிசையில் வெற்றி பெற்றன. இவரும் ரகுமானும் தக்சிக் திரைப்படத்தில் "முஜே ரங் தே" லகான், திரைப்படத்தில் "இராதா கைசே நா ஜாலே" (உதித் நாராயணுடன் காதல் பாடல்) தால் திரைப்படத்தில் "கஹின் ஆக் லகே" தாவூத் திரைப்படத்தில் "ஓ பன்வாரே" இருவர், திரைப்படத்தில் கே. ஜே. யேசுதாசுடன் காதல் பாடல் "வெண்ணிலா வெண்ணிலா" அலைபாயுதே திரைப்படத்தில் "செப்டம்பர் மாதம்", மீனாட்சி திரைப்படத்தில் "துவான் துவான்" போன்ற பல வெற்றிப் பாடல்களைப் பதிவு செய்தனர்.[15]
ஆசாவின் வீடு தெற்கு மும்பையின் பெடார் சாலைப் பகுதியிலுள்ள பிரபுகுஞ்ச் ஆப்டில் அமைந்துள்ளது. ஆசா, தனது 16ஆம் வயதில், 31 வயதான கண்பத்ராவ் போசுலேவை காதல் திருமணம் செய்தார். இவர்கள் 1960இல் பிரிந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகளும், ஐந்து பேரக்குழந்தைகளும் உள்ளனர். இவரது மூன்று குழந்தைகளில் மூத்தவர், கேமந்து போசுலே (கேமந்து குமார் என்று பெயரிடப்பட்டது) தனது ஆரம்ப ஆண்டுகளில் பெரும்பாலான நேரங்களை ஒரு விமானியாகக் கழித்தார். மேலும் இசை இயக்குநராக சில காலம் இருந்தார். போசுலேவின் மகள் வர்சா போசுலே 2012 அக்டோபர் 8 அன்று தற்கொலை செய்து கொண்டார்; அவருக்கு வயது 56. மேலும் இவர் தி சண்டே அப்சர்வர், ரெடிஃப் பத்திரிகையின் கட்டுரையாளராகப் பணியாற்றினார்.[22]
ஆசாவின் இளைய பிள்ளை ஆனந்து போசுலே வணிகம் மற்றும் திரைப்பட இயக்கப் பிரிவில் படித்தார். அவர் ஆசாவின் தொழில் வாழ்க்கையை நிர்வகிக்கிறார். ஆசாவின் பேரன், சைதன்யா (சிந்து) போசுலே (ஹேமந்தின் மகன்) ஆகியோர் உலக இசையின் ஓர் அங்கமாக கருதப்படுகின்றனர். அவர் இந்தியாவின் முதல் இசைக்குழு பாய் பேண்ட், "எ பேண்ட் ஆஃப் பாய்ஸ்" ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளார். இசைக்குழுவில் இவரது சகோதரிகள் லதா மங்கேஷ்கர், உஷா மங்கேஷ்கர் ஆகியோர் பின்னணிப் பாடகர்களாக உள்ளனர். ஆசாவின் மற்றொரு, சகோதரி மீனா மங்கேசுகர், சகோதரர் கிருதநாத்து மங்கேசுகர் ஆகியோர் இசை இயக்குநர்களாவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.