From Wikipedia, the free encyclopedia
ஆர்சனிக் ஐம்புளோரைடு (Arsenic pentafluoride) என்பது AsF5 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆர்சனிக் மற்றும் புளோரின் தனிமங்கள் இணைந்து இச்சேர்மம் உண்டாகிறது. ஆர்சனிக் ஐம்புளோரைடில் +5. ஆக்சிசனேற்ற நிலையில் ஆர்சனிக் காணப்படுகிறது,
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆர்சனிக் பென்டாபுளோரைடு | |||
வேறு பெயர்கள்
ஆர்சனிக்(V) புளோரைடு, ஐம்புளோரோ ஆர்சோரேன் | |||
இனங்காட்டிகள் | |||
7784-36-3 | |||
ChEBI | CHEBI:30530 | ||
ChemSpider | 74203 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 82223 | ||
| |||
பண்புகள் | |||
AsF5 | |||
வாய்ப்பாட்டு எடை | 169.9136 கி மோல்−1 | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
அடர்த்தி | 2.138 g cm−3[1] | ||
உருகுநிலை | -79.8 ˚C[1] | ||
கொதிநிலை | -52.8 ˚C[1] | ||
கரைதிறன் | எத்தனால், இருமெத்தில் ஈதர், பென்சீன் ஆகியவற்றில் கரையும். | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | Toxic (T) சூழலுக்கு அபாயமானவை (N) | ||
R-சொற்றொடர்கள் | R23/25, R50/53 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S20/21, S28, S45, S60, S61 | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
group 5 புளோரைடுகள் தொடர்புடையவை |
பாசுபரசு ஐம்புளோரைடு ஆண்டிமனி ஐம்புளோரைடு பிசுமத் ஐம்புளோரைடு | ||
தொடர்புடைய சேர்மங்கள் | ஆர்சனிக் ஐங்குளோரைடு ஆர்சனிக் முப்புளோரைடு ஆர்சனிக் ஐந்தாக்சைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
நேரடியாக ஆர்சனிக்கும் புளோரினும் வினைபுரிவதால் ஆர்சனிக் ஐம்புளோரைடு உருவாகிறது:[2].
ஆர்சனிக் முப்புளோரைடுடன் புளோரினைச் சேர்த்து வினைபுரியச் செய்வதாலும் இதைத் தயாரிக்கலாம்.
ஆர்செனிக் ஆக்சைடுகளுடன் தனிமநிலை புளோரினைச் சேர்த்து வினைப்படுத்துவதாலும் ஆர்சனிக் ஐம்புளோரைடைத் தயாரிக்கலாம்.
நிறமற்ற வாயுவாகக் காணப்படும் ஆர்சனிக் ஐம்புளோரைடு , முக்கோண இரட்டைப்பட்டைக் கூம்பு அமைப்பைப் பெற்றுள்ளது[2] In the solid state the axial As-F bond lengths are 171.9 pm and the equatorial 166.8 pm.[2]. திண்ம நிலையில் As-F அச்சு நீளம் 171.9 பை.மீ ஆகவும் நடுவரை அச்சு நீளம் 166.8 பை.மீ ஆகவும் இருக்கிறது.
ஆலைடு அணைவுச் சேர்மங்களாக ஆர்சனிக் ஐம்புளோரைடு உருவாகிறது. கந்தக நான்கு புளோரைடுடன் ஆர்சனிக் ஐம்புளோரைடு வினைபுரிந்து அயனி அணைவுச்சேர்மமாக உருவாகும் வினை இச்சேர்மம் ஒரு வலிமைமிக்க ஏற்பி என்பதை வெளிப்படுத்துகிறது.[3]
ஆர்ச்னிக் ஐம்புளோரைடு மிகவும் நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகும். குறிப்பாக இச்சேர்மம் கல்லீரல் செல்களைப் பாதிக்கிறது எனக் கருதப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.