![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Green-anaconda.jpg/640px-Green-anaconda.jpg&w=640&q=50)
ஆனைக் கொன்றான்
ஒரு பாம்பு இனம் / From Wikipedia, the free encyclopedia
அனகோண்டாக்கள் (Anaconda) தென் அமெரிக்க மித வெப்பக் காடுகளில் காணப்படும் மிகப் பெரிய, நச்சுத்தன்மையற்ற போஅஸ் வகையைச் சேர்ந்த பாம்புகளாகும். இப்பெயர் சில பாம்புக் குடும்பங்களைக் உள்ளடக்கியதாக இருப்பினும், முக்கியமாக ஒரே ஒரு பாம்பை, அதாவது பச்சை அனகோண்டாவாகிய "யுனெக்டஸ் முரினஸ் என்பதனைக் குறித்தே பயன்படுத்தப்படுகிறது. வலையுரு மலைப் பாம்பையும் சேர்த்து இது உலகிலேயே மிகப் பெரிய, நீளமான பாம்பாகும். ஆராய்ச்சிக் கூடங்களில் பிடித்தோ கொன்றோ அளக்கப்பட்ட அனகோண்டாக்களில் 30 அடி நீளம் வரை கண்டறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன.[சான்று தேவை]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/Green-anaconda.jpg/640px-Green-anaconda.jpg)
கூடுதலாக நீரிலேயே வாழும் இவை குறிப்பாக அமேசான் ஆறு போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை மனிதர்களைத் தாக்கியிருந்தாலும், அவர்களை இரையாகக் கொள்வதில்லை. இவை பொதுவாக மீன்கள், ஆற்றுக்கோழிகள், அரிதாக ஆற்றுக்கு அருகே வரும் ஆடுகள், குதிரைகளையே இரையாக உண்ணுகின்றன.
அனகோண்டாக்களால் தாக்கப்படுவதைக் கருவாகக் கொண்டு பல படக் கதைகள், திரைப்படங்கள் மற்றும் சாகசக் கதைகள் அமேசான் காட்டுப் பின்னணியில் புனையப்பட்டுள்ளன.
அனகோண்டா என்ற பெயர்:
- யுனெக்டஸ் பேரினத்தைச் சேர்ந்த, தென் அமெரிக்க பெரிய நீர்வாழ் பாம்புகளைக் குறிக்கும்.
- அந்தீசு மலைத்தொடரின் கிழக்கே உள்ள கொலம்பியா, வெனிசுலா, கினியா, ஈக்வெடார், பெரு, பொலிவியா, பிரேசில் மற்றும் டிரினிடாட் தீவுகளில் காணப்படும் மிகப்பெரிய பாம்பாகிய யுனெக்டஸ் முரினஸ் (பச்சை அனகோண்டா) வகையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
- யுனெக்டஸ் நோடியஸ் (மஞ்சள் அனகோண்டா) என்பது கிழக்கு பொலிவியா, தெற்கு பிரேசில், பராகுவே, வடகிழக்கு அர்ஜென்டினா ஆகிய இடங்களில் காணப்படும் சிறிய வகைப் பாம்புகளையும் குறிக்கும்.
- வடகிழக்கு பிரேசில், பிரெஞ்சு கயானாவின் கடலோரப் பகுதிகளில் காணப்படும் அரியவகை பாம்பாகிய யுனெக்டஸ் டெஸ்சாயுயன்சியியையும் (கரும்புள்ளி கொண்ட அனகோண்டா) குறிக்கும்.
- தென் அமெரிக்க தொன்மக் கதைகளில் குறிப்பிட்டுள்ள ராட்சச அனகோண்டாக்களையும் குறிக்கும்.
- தன் இரையை "நொறுக்கி" உட்கொள்ளும் எந்த ஒரு பெரிய பாம்புமே இப்பெயரால் அழைக்கப்படுகிறது.[1]