![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c7/ShababFlag.svg/langta-640px-ShababFlag.svg.png&w=640&q=50)
அல் சபாப்
From Wikipedia, the free encyclopedia
அல் சபாப் (Al-Shabaab, அரபு மொழி: حركة الشباب المجاهدين, எனும் குழு சோமாலியா நாட்டில் செயல்படும் ஜிகாத் இயக்கம் ஆகும். அல் சபாப் எனும் அரேபிய மொழிச் சொல்லுக்கு நல் இளைஞன் என்று பொருள்.[2] 2012 ஆம் ஆண்டில் இது அல் காயிதா என்ற தீவிரவாத அமைப்பில் இணைந்தது.[3] இக்குழுவில் பல்வேறு நாட்டு இசுலாமிய இளைஞர்களும் சேர்ந்து ஜிகாத் எனும் புனிதப்போரில் ஈடுபட்டுள்ளனர். 2013 நிலவரப்படி, இக்குழுவினர் சோமாலியாவில் முக்கிய நகரங்களிலிருந்து வெளியேறி விட்டாலும், நாட்டில் பல கிராமப் பகுதிகளில் கடுமையான இசுலாமியச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.[4][5] அல் சபாப் இயக்கத்தில் 4,000 முதல் 9,000 போராளிகள் வரை உறுப்பினர்களாக உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.[6] அல்-சபாப் இயக்கத்தை, ஐக்கியஅமெரிக்காவும், ஐக்கிய இராச்சியமும் தடை செய்துள்ளது[2].
விரைவான உண்மைகள் அல்-சபாப்Al-Shabaab الشباب, இயங்கிய காலம் ...
அல்-சபாப் Al-Shabaab الشباب | |
---|---|
சோமாலிய உள்நாட்டுப் போர் | |
![]() போர்க்கொடி ![]() இயக்கக் கொடி | |
இயங்கிய காலம் | 2006 முதல் இதுநாள் வரை |
கொள்கை | சுன்னி இசுலாம், இசுலாமியம் ஜிகாதியம் சூபிசத்தை எதிர்த்தல் கடுமையான இசுலாமியச் சட்டம் Takfir |
தலைவர்கள் | |
செயற்பாட்டுப் பகுதி |
தெற்கு சோமாலியா உகாண்டா கென்யா |
Strength | 4,000–9,000 போராளிகள்[1] |
Part of | அல் காயிதா |
கூட்டு | ![]() ![]() |
எதிராளிகள் | ![]() |
மூடு