ஆப்பிரிக்க நாடு From Wikipedia, the free encyclopedia
கென்யா (Kenya), அதிகாரபூர்வமாக கென்யக் குடியரசு (Republic of Kenya), என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். நைரோபி இதன் இதன் தலைநகரும் பெரிய நகரமும் ஆகும். நடுநிலக் கோட்டில் அமைந்துள்ள கென்யாவின் எல்லைகளாக, தெற்கு மற்றும் தென்மேற்கே தன்சானியா, மேற்கே உகாண்டா, வட-மேற்கே தெற்கு சூடான், வடக்கே எத்தியோப்பியா, வட-கிழக்கே சோமாலியா ஆகிய நாடுகளைக் கொண்டுள்ளது. இதன் பரப்பளவு 581,309 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை அண்ணளவாக 48 மில்லியன்கள் (சனவரி 2017) ஆகும்.[2]
கென்யக் குடியரசு Republic of Kenya Jamhuri ya Kenya (கிசுவாகிலி) | |
---|---|
குறிக்கோள்: "ஒன்றுபட்டு இழுத்துச் செல்வோம்" "Let us all pull together" | |
நாட்டுப்பண்: Ee Mungu Nguvu Yetu எல்லாப் படைப்புகளதும் கடவுளே | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | நைரோபி 1°16′S 36°48′E |
ஆட்சி மொழி(கள்) | |
தேசிய மொழி | கிசுவாகிலி[1] |
இனக் குழுகள் (2018[2]) |
|
மக்கள் | கென்யர் |
அரசாங்கம் | ஒற்றை அரசுத்தலைவர் ஆட்சிக் குடியரசு |
• அரசுத்தலைவர் | உகுரு கென்யாட்டா |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மேலவை |
• கீழவை | தேசியப் பேரவை |
விடுதலை | |
• ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | 12 திசம்பர் 1963 |
• குடியரசு | 12 திசம்பர் 1964 |
பரப்பு | |
• மொத்தம் | 580,367 km2 (224,081 sq mi)[3] (48-வது) |
• நீர் (%) | 2.3 |
மக்கள் தொகை | |
• 2017 மதிப்பிடு | 49,125,325[4] (28-வது) |
• 2009 கணக்கெடுப்பு | 38,610,097[5] |
• அடர்த்தி | 78/km2 (202.0/sq mi) (124-வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $175.659 பில்லியன்[6] |
• தலைவிகிதம் | $3,657.068[6] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2018 மதிப்பீடு |
• மொத்தம் | $85.980 பில்லியன்[6] |
• தலைவிகிதம் | $1,790.014[6] |
ஜினி (2014) | 42.5[7] மத்திமம் · 48-வது |
மமேசு (2015) | 0.555[8] மத்திமம் · 146-வது |
நாணயம் | கென்ய சில்லிங்கு (KES) |
நேர வலயம் | ஒ.அ.நே+3 (கி.ஆ.நே) |
திகதி அமைப்பு | நா/மா/ஆ (கிபி) |
வாகனம் செலுத்தல் | இடது |
அழைப்புக்குறி | +254 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | KE |
இணையக் குறி | .ke |
[2] cia.gov இணையத்தளத்தின்படி, இந்நாட்டுக்கான கணக்கெடுப்புகள் எய்ட்ஸ் நோயின் காரணமாக நேரும் உயிரிழப்புகளை கணக்கில் கொள்கிறது. இதன் காரணமாக, எதிர்பார்க்கப்படும் வாழ்நாள், மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவாகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் அதிகமாகவும் மதிப்பிடப்படலாம். பால்வாரியாகவும் வயதுவாரியாகவும் கணக்கிடப்படும் மக்கள்தொகை பரம்பலும் மாறலாம். |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.