அலெக்சிசு சான்சேசு

சிலி சங்க கால்பந்து வீரர் From Wikipedia, the free encyclopedia

அலெக்சிசு சான்சேசு

அலெக்சிசு சான்சேசு (Alexis Sánchez, பிறப்பு திசம்பர் 19, 1988), சிலி நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார். இவர் இங்கிலாந்தின் ஆர்சனல் மற்றும் சிலி தேசிய காற்பந்து அணிகளில் முன்கள வீரராக ஆடிவருகிறார்.

விரைவான உண்மைகள் சுய தகவல்கள், முழுப் பெயர் ...
அலெக்சிசு சான்செசு
Alexis Sánchez
Thumb
2011 இல் சான்செசு
சுய தகவல்கள்
முழுப் பெயர்அலெக்சிசு அலெசாந்திரோ
சான்செசு சான்செசு[1]
பிறந்த நாள்19 திசம்பர் 1988 (1988-12-19) (அகவை 36)[1][2]
பிறந்த இடம்டொக்கோபில்லா, சிலி[2][3]
உயரம்1.69 மீ[4][5][6]
ஆடும் நிலை(கள்)முன்களவீரர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ஆர்சனல்
எண்7
இளநிலை வாழ்வழி
2004–2005கோப்ரலோவா
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2005–2006கோப்ரலோவா47(9)
2006–2011யூதினீசி95(20)
2006–2007→ கோலோ-கோலோ (கடன்)32(5)
2007–2008→ ரிவர் பிளேட் (கடன்)23(4)
2011–2014பார்சிலோனா88(39)
2014–ஆர்சனல்65(29)
பன்னாட்டு வாழ்வழி
2006–2008சிலி 20-வயதுக்குக்கீழ்18(4)
2006–சிலி100(34)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 21 மே 2016 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 23 சூன் 2016 அன்று சேகரிக்கப்பட்டது.
மூடு

2006-ஆம் ஆண்டுமுதல் சிலி தேசிய கால்பந்து அணிக்காக ஆடிவருகிறார். தேசிய அணியில் 100 முறை பங்கேற்று ஆடியுள்ள இவர், சிலியின் கோல் காப்பாளரான கிளாடியோ பிராவோவுக்கு அடுத்தபடியாக சிலி தேசிய அணியில் அதிகமுறை பங்கேற்றவராக விளங்குகிறார். மேலும், 34 கோல்களுடன் தேசிய அணியின் வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இவர் இரண்டு உலகக்கோப்பைகள் (2010 மற்றும் 2014) மற்றும் மூன்று கோப்பா அமெரிக்கா போட்டித் தொடர்களில் பங்கெடுத்துள்ளார்; அவற்றுள் 2014 மற்றும் 2015 கோப்பா அமெரிக்கா கோப்பைகளை வென்றுள்ளார்.

விருதுகள்

கழகம்

கோலோ-கோலோ[7]
  • முதன்மை தேசிய காற்பந்து கூட்டத்தொடர் (சிலி) (2): 2006 கிளாசுரா, 2007 அபெர்ச்சுரா
  • கோபா சூடாமெரிக்கானா இரண்டாம் இடம்: 2006
ரிவர் பிளேட்[7]
  • அர்ஜென்டினா முதன்மை கால்பந்து கூட்டத்தொடர்: 2008 கிளாசுரா
பார்சிலோனா[7]
ஆர்சனல்[7]

தேசியம்

சிலி[8]

உசாத்துணைகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.