Remove ads
From Wikipedia, the free encyclopedia
கோபா டெல் ரே (Copa del Rey, அரசரின் கோப்பை) என்பது எசுப்பானிய காற்பந்து அணிகளுக்காக ஒவ்வோராண்டும் நடத்தப்படும் கால்பந்துக் கோப்பைப் போட்டியாகும். ஜப்பானின் புகழ்மிக்க பேரரசரின் கோப்பை போன்று முடியாட்சியின் பெயரைக் கொண்டிருக்கும் காற்பந்துக் கோப்பையாகும்.
தோற்றம் | 1903 |
---|---|
மண்டலம் | எசுப்பானியா |
அணிகளின் எண்ணிக்கை | 83 |
தற்போதைய வாகையாளர் | அத்லெடிகோ மாட்ரிட் (10-வது பட்டம்) |
இணையதளம் | http://www.RFEF.es |
2013–14 கோபா டெல் ரே |
1903 ஆம் ஆண்டில் இக்கோப்பைப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; ஆதலால், இதுவே மிகப் பழைமையான எசுப்பானிய காற்பந்துப் போட்டியாகும். பொதுவாக கோபா டெல் ரே வாகையர்கள் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர். கோப்பை வெற்றியாளர்கள் ஏற்கனவே யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்குத் தகுதிபெற்றிருந்தால் இரண்டாம் இடம் பெறுவோர் யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர்.
இக்கோப்பையின் தற்போதைய வெற்றியாளர்கள் அத்லெடிகோ மாட்ரிட் அணியினராவர்; இறுதிப் போட்டியில் ஒரே-நகர எதிரிகளான ரியல் மாட்ரிட் அணியினரை வென்று கோப்பையைக் கைப்பற்றினர். பார்சிலோனா அணியினரே இக்கோப்பையை வென்றிருக்கின்றனர்; அவர்கள் மொத்தமாக 26 முறையாக இதில் வாகையர் பட்டம் சூடியிருக்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.