![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/05/Captain_Amarinder_Singh.jpg/640px-Captain_Amarinder_Singh.jpg&w=640&q=50)
அமரிந்தர் சிங்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கேப்டன் அமரிந்தர் சிங் (பிறப்பு: மார்ச்சு 11, 1942) பஞ்சாபைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். முன்னாள் பாட்டியாலா இராச்சியத்தைச் சேர்ந்த இவர் பஞ்சாபின் முதலமைச்சராகப் பணிபுரிந்துள்ளார்.[1] 2014 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் பெருந்தலைவரான அருண் ஜெட்லியைத் தோற்கடித்து அமிர்தசரசு இல் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விரைவான உண்மைகள் அமரிந்தர் சிங், பஞ்சாப் முதலமைச்சர் ...
அமரிந்தர் சிங் | |
---|---|
![]() | |
பஞ்சாப் முதலமைச்சர் | |
பதவியில் 16 மார்ச் 2017 – 18 செப்டம்பர் 2021 | |
முன்னையவர் | பிரகாஷ் சிங் பாதல் |
பஞ்சாப் மாநில காங்கிரசு குழுத் தலைவர் | |
பதவியில் 1998–2002 | |
முன்னையவர் | இரஜீந்தர் கவுர் பட்டல் |
பின்னவர் | எச் எசு அன்சுபல் |
பதவியில் 2010–2013 | |
முன்னையவர் | மொகிந்தர் சிங் கேப்பீ |
பின்னவர் | பர்தாப் சிங் பாஜ்வா |
மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2014 - 2017 | |
முன்னையவர் | நவ்ஜோத் சிங் சித்து |
தொகுதி | அமிர்தசரசு |
பதவியில் 1980-1984 | |
முன்னையவர் | குருசரண் சிங் டோரா |
பின்னவர் | சரண்சித் சிங் வாலியா |
தொகுதி | பாட்டியாலா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | small மார்ச்சு 11, 1942 (1942-03-11) (அகவை 82) பட்டியாலா, பஞ்சாப் |
இறப்பு | small caption Amarinder Singh |
இளைப்பாறுமிடம் | small caption Amarinder Singh |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர்கள் | பிரநீத் கவுர் |
பெற்றோர் |
|
வாழிடம்s | புது மோத்தி பாக் அரண்மனை, பட்டியாலா |
இணையத்தளம் | அலுவல்முறை வலைத்தளம் |
மூடு
இவர் 2002 முதல் 2007 முடிய பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர். இவர் மீண்டும் இரண்டாம் முறையாக 16 மார்ச் 2017 அன்று மீண்டும் பஞ்சாப் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-இல் காங்கிரசு கட்சி மேலிடத்தில் மீது ஏற்பட்ட அதிருப்தியால், அம்ரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவி விலகல் கடிதத்தை, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் 18 செப்டம்பர் 2021 அன்று கொடுத்தார்.[2][3]