From Wikipedia, the free encyclopedia
அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள் (கி.மு. 269-233 )[1] என்பவை பாறைக் கல்வெட்டுகளாகும், இவை அசோகர் கல்வெட்டுக்களின் ஆணைகளின் துவக்கக் காலத்தவை ஆகும். இவை அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்களுக்கு முந்தையவை. பேரரசர் அசோகரின் 11வது ஆட்சியாண்டில் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட இந்திய மொழியில் முதல் கல்வெட்டுகள் இவை. காலவரிசைப்படி இவற்றிற்கு முந்தவையான காந்தார இருமொழிக் கல்வெட்டு, கிரேக்கம் மற்றும் அராமிக் மொழியில் வெட்டப்பட்டது. அது அவரது 10வது ஆட்சி ஆண்டில் (கிமு 260) செதுக்கப்படது.[2][3] இது அசோகரின் அறியப்பட்ட முதல் கல்வெட்டு ஆகும்.[4] இருப்பிடத்தைப் பொறுத்து இந்தக் கல்வெட்டுகளின் உள்ளடக்கத்தில் பல சிறிய மாறுபாடுகள் உள்ளன.
கிரேக்க அல்லது அரமேய மொழியில் உள்ள அசோகரின் கல்வெட்டுகள் சில சமயங்களில் "சிறு பாறைக் கல்வெட்டுகள்" என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
சிறு பாறைக் கல்வெட்டுகள் அசோகரின் ஆட்சியின் துவக்கத்தில் எழுதப்பட்டவை. இவை அவருடைய ஆட்சியின் 11வது ஆண்டிலிருந்து ("பௌத்தராக மாறிய இரண்டரை ஆண்டுகள்" என்ற அவரது கல்வெட்டின் படி. அதாவது குறைந்தபட்சம் அவரது ஆட்சியின் எட்டாவது ஆண்டு கலிங்க வெற்றிக்குப் பிறகு, இது அவர் படிப்படியாக புத்த சமயத்திற்கு மாறுவதற்கான தொடக்க புள்ளியாகும்). கல்வெட்டுகளின் வேலைப்பாடுகளின் தொழில்நுட்பத் தரம் பொதுவாக மிகவும் மோசமாக உள்ளது. பொதுவாக அசோகரின் ஆட்சியின் 26 மற்றும் 27 ஆம் ஆண்டுகளின் தூண் கல்வெட்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைந்த தரத்தில் உள்ளன.[5]
இந்த சிறிய பாறைக் கல்வெட்டுகள், அசோகரின் ஆட்சியின் 10 ஆம் ஆட்சி ஆண்டில் செதுக்கபட்ட முதல் கல்வெட்டைப் பின்பற்றி செதுக்கபட்டுள்ளன. இது ஆப்கானித்தானத்தின் மையத்தில் காந்தாரத்தின் சில் சீனாவில் நிறுவப்பட்ட காந்தார இருமொழிக் கல்வெட்டு ஆகும்.[6] இந்த முதல் கல்வெட்டு செவ்வியல் கிரேக்கம் மற்றும் அரமேய மொழியில் பிரத்தியேகமாக செதுக்கப்பட்டது.
சிறு பாறைக் கல்வெட்டுக்கள், அசோகரின் 12வது ஆட்சி ஆண்டிலிருந்து, தருமமத்தைப் பிரப்புரை செய்வதற்காக நிறுவப்பட்ட பெரும் பாறைக் கல்வெட்டுக்களை விட சற்று முந்தையதாக இருக்கலாம்.[7] இந்த அசோகர் கல்வெட்டுகள் இந்திய மொழிகளில் உள்ளன, அசோகரின் காந்தாரக் கிரேக்க கல்வெட்டுகள் சுண்ணாம்புக் கல் மீது பொறிக்கப்பட்டுள்ளன.[6] பின்னர், அவரது ஆட்சியின் 26 மற்றும் 27 ஆம் ஆண்டுகளில், அசோகர் புதிய கல்வெட்டுகளைப் பொறித்தார். அவை கம்பீரமாக நெடுவரிசைகளில், அசோகரின் தூண்களில் பொறிக்கப்பட்டன.[7][5]
சிறு பாறைக் கல்வெட்டுளில், அசோகர் தன்னை ஒரு "சாதாரண சீடர்" அல்லது "புத்தரின் சீடர்" என்று காட்டுவதன் மூலம் தனது சமயத் தொடர்பைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார்.
தேவர்களுக்குப் பிரியனானவன் இங்ஙனம் ஆணையிடுகிறான். நற்காரியங்களில் விசேஷ ஊக்கம் செலுத்தாமல் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலளவும் நான் உபாஸகனாயிருந்தேன். இப்போது ஆண்டாக சங்கத்திற் சேர்ந்து மிகுந்த ஊக்கத்தோடு உழைத்துவர எனக்கு நேரிட்டிருக்கிறது. இதுவரையும் தேவர்களை அனுசரித்து ஒழுகா மனிதர் இப்பொழுது ஜம்பூத்தீவிவு முழுவதும் தேவர்களை அனுசரித்து ஒழுகிவருகின்றனர். இது எனது உழைப்பின் பயனாகும். இந்நன்மை பெருமுயற்சியின்றிக் கிடைக்கக்கூடியதன்று. ஆனால் சிறியோரும் தமது உழைப்பால் மறுமையின் க்ஷேமத்தை யடையலாம். இதனாலன்றோ “சிறியோரும் பெரியோரும் முயன்றுவரட்டும்” என்ற முதுமொழி ஏற்பட்டுள்ளது. என் அயலாரும் இப்போதனையை உணர்ந்து இத்தகைய நன்முயற்சியை அழியாதபடி நிலைநாட்ட வேண்டும். இவ்வுத்தேசம் கட்டாயமாய் வளரும். இன்னுமின்னும் பல மடங்கு பயனளிக்கும்.
— ஆர். ராமய்யர் மொழிபெயர்ப்பு, நூல் அசோகனுடைய சாஸனங்கள்- முதல் உபசாஸனம்[8]
குஜாரா சிறு பாறைக் கல்வெட்டுக்களிலும், அசோகரின் பெயர் அவரது பட்டங்களுடன் "தேவானம்பிய பியாதாசி அசோகராஜா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரரசர் அசோகர் இந்திய துணைக்கண்டம் முழுவதும் 20 சிறு பாறைக் கல்வெட்டுக்கள் நிறுவியுள்ளார். அவைகள்:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.