வானியல் அலகு
From Wikipedia, the free encyclopedia
வானியல் அலகு (astronomical unit, AU அல்லது ua) என்பது ஒரு நீள அலகு. இது அண்ணளவாக பூமியில் இருந்து சூரியன் வரையான தூரத்திற்குச் சமமாகும். வானியல் அலகின் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நீளம் 149 597 870 691 ± 30 மீட்டர்கள் (150 மில்லியன் கிலோமீட்டர்கள் அல்லது 93 மில்லியன் மைல்கள்) ஆகும்.
விரைவான உண்மைகள் SI அலகுகள், வானியல் அலகுகள் ...
SI அலகுகள் | |
---|---|
149.6×109 மீ | 149.6×106 கிமீ |
வானியல் அலகுகள் | |
1 வாஅ | 15.813×10−6 ஒஆ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
490.81×109 அடி | 92.956×106 மை |
மூடு
1976 இல் பன்னாட்டு வானியல் கழகம் வானியல் அலகுக்கான புதிய வரவைத் தந்தது. இதன் படி, 365.2568983 நாட்கள் சுற்றுக்காலம் கொண்டதும், சூரியனின் வட்டப் பாதையில் சுழலும் புறக்கணிக்கத்தக்க திணிவு கொண்டதுமான துணிக்கை ஒன்றிலிருந்து சூரியனின் நடுப் புள்ளி வரையுமான தூரம் ஒரு வானியல் அலகு என வரையறுக்கப்பட்டது. இந்த வரைவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தூரத்தை விட சிறிது குறைவானதாகும்.