மீட்டர்
நீட்டலளவைக்கான சர்வதேச நியம அலகு / From Wikipedia, the free encyclopedia
மீட்டர் (metre அல்லது meter, இலங்கை வழக்கு: மீற்றர்) என்பது அனைத்துலக முறை அலகுகளில் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும்.[1] மீட்டரின் ஆங்கிலக் குறியீடு m ஆகும். தமிழ்க் குறியீடு மீ என்பதாகும். இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 அங்குலங்களுக்குச் சமமாகும் (தோராயமாக 39.37 அங்குலங்கள்)
விரைவான உண்மைகள் மீட்டர், அலகு முறைமை ...
மீட்டர் | |
---|---|
அலகு முறைமை | அ.மு அடிப்படை அலகு |
அலகு பயன்படும் இடம் | நீளம் |
குறியீடு | m |
அலகு மாற்றங்கள் | |
1 m இல் ... | ... சமன் ... |
ஐக்கிய அமெரிக்க/பிரித்தானிய வழக்கமான அலகுகள் | ≈ 3.2808 அடி |
≈ 39.370 அங்குலம் |
மூடு
துவக்கத்தில் புவியின் நிலநடுக் கோட்டிலிருந்து வட துருவம் (கடல் மட்டத்தில்) வரையிலான தொலைவில் ஒன்றில் ஒரு கோடி பங்காக வரையறுக்கப்பட்டது. அளவியல் குறித்த அறிவு மேம்பட்டதை அடுத்து இது படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: வெற்றிடத்தில் ஒளியானது 1⁄299,792,458 நொடியில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர்.[2]