செம்பட்டியல்
From Wikipedia, the free encyclopedia
செம்பட்டியல் அல்லது சிவப்புப் பட்டியல் (Red list) என்பது ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature) என்ற அமைப்பு வெளியிடும் இந்த சிவப்புப் பட்டியல் இனங்களின் வெவ்வேறு காப்பு நிலைகளை பட்டியலிடுகின்றது. இவற்றில் முக்கியமான பத்து நிலைகளாவன:[1][2][3]
- இனஅழிவு நிகழ்ச்சியினால் அற்றுவிட்ட இனம் (EX)
- இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW)
- மிக அருகிய இனம் (CR)
- அருகிய இனம் (EN)
- அழிவாய்ப்பு இனம் (VU)
- அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT)
- தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் (LC)
- தரவுகள் போதாது (DD)
- மதிப்பீடு செய்யப்படாத இனம் (NE)
விரைவான உண்மைகள் தலைமையகம், சேவை பகுதி ...
தலைமையகம் | ஐக்கிய இராச்சியம் |
---|---|
சேவை பகுதி | சர்வதேசம் |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
தாய் அமைப்பு | பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் |
சார்புகள் | இனப் பாதுகாப்புச் சபை, சர்வதேச பறவைப் பாதுகாப்பு, இயற்கை உதவி, தாவரவியல் பூங்காக்களுக்கான பாதுகாப்பு நிறுவனம், றோயல் தாவரவியல் பூங்காக்கள், டெக்ஸாஸ் A&M பல்கலைக்கழகம், ரோம சேபியன்ஸா பல்கலைக்கழகம், லண்டன் விலங்கியல் சங்கம் |
வலைத்தளம் | http://www.iucnredlist.org |
மூடு