காப்பு நிலை
உயிரினங்களின் எண்ணிக்கை செழுமை வருங்கால நிலை குறித்த அளவீடு / From Wikipedia, the free encyclopedia
காப்பு நிலை (Conservation status) என்பது ஓர் சிற்றினம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையைத் தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆராயப்படுகின்றன. தற்பொழுதுள்ள எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் இவற்றின் இனத்தொகையின் வளர்ச்சி அல்லது தளர்ச்சி, இனப்பெருக்க வீதம், தெரிந்த ஆபத்துகள் என்பவையும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.