ஹொங்கொங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
ஆங்காங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Hong Kong International Airport) உலகின் பரப்பான விமான நிலையங்களில் பன்னிரண்டாவது விமான நிலையமாகும்.[2]. இதனை பேச்சு வழக்கில் செக் லப் கொக் வானூர்தி நிலையம் என்றும் அழைப்பர். அதற்கான காரணம் இவ்வானூர்தி நிலையம் அமையப்பட்டிருக்கும் தீவின் பெயர் செக் லப் கொக் என்பதாகும். இந்நிலையம் ஹொங்கொங்கின் முன்னாள் விமான நிலையமான கை டக் விமான நிலையத்திற்கான மாற்றீடாக கட்டப்பட்டதாகும். இவ்வானூர்தி நிலையம் 1998 ஆம் ஆண்டு தனது சேவையைத் தொடர்ந்ததிலிருந்து குறுகிய காலத்திற்குள் ஸ்கைடெக்ஸ் நிறுவனத்தினரால் வழங்கப்படும் உலகின் சிறந்த விமான நிலையத்திற்கான விருதை (Skytrax World Airport Awards) ஏழு முறை தட்டிச்சென்றது.[3][4]
ஆங்காங் பன்னாட்டு வானூர்தி நிலையம் Hong Kong International Airport | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||||||
உரிமையாளர் | ஆங்காங் வானூர்தி நிலைய ஆணையம் (ஆங்காங் அரசு) | ||||||||||||||||||
இயக்குனர் | ஆங்காங் வானூர்தி நிலைய ஆணையம் | ||||||||||||||||||
சேவை புரிவது | ஆங்காங், குவாங்சௌ-ஆங்காங்-மக்காவு விரிகுடா பகுதி | ||||||||||||||||||
அமைவிடம் | செக் லொப் கொக் தீவு, தீவுகள் மாவட்டம், புதிய கட்டுப்பாட்டகம், ஆங்காங் | ||||||||||||||||||
திறக்கப்பட்டது | 6 சூலை 1998 (25 ஆண்டுகள் முன்னர்) (1998-07-06) | ||||||||||||||||||
மையம் | பயணிகள்
சரக்கு
| ||||||||||||||||||
உயரம் AMSL | 9 m / 28 ft | ||||||||||||||||||
ஆள்கூறுகள் | 22°18′32″N 113°54′52″E | ||||||||||||||||||
இணையத்தளம் | www.hongkongairport.com | ||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2019) | |||||||||||||||||||
| |||||||||||||||||||
சான்றுகள்: ஆங்காங் வானூர்தி நிலைய ஆணையம்[1] |
ஹொங்கொங் வானூர்தி நிலையம் உலகின் மிகப்பெரிய பயணிகள் தரிப்பிடத்தை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், 24 மணி நேரச் சேவையையும் சிறப்புடன் வழங்கி வருகின்றது. இவ்விமான நிலையம் ஹொங்கொங் வானூர்தி நிலைய நிர்வாகத்தினரின் பொறுப்பில் இயங்குகின்றது. இது கதே பசிபிக், டிராகன் எயார், ஆங்காங் எக்ஸ்பிரஸ் எயார்வேசு, ஆங்காங் ஏர்லைன்சு, சீனா ஏர்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், ஏர் ஆங்காங் (சரக்கு) மற்றும் ஆசியா ஜெட்(தனியார்) போன்ற வானூர்திச் சேவைகளை தன்னகத்தே கொண்டு, 90 வான்வழிப் போக்குவரத்துக்களை உலகின் 150 நகரங்களூடாக வழங்குகின்றது. 2008 ஆம் ஆண்டு, அறிக்கைப்படி உலகின் பரப்பான சரக்கு ஏற்றிறக்கும் வானூர்தி நிலையங்களில் இது இரண்டாவது வானூர்தி நிலையமாகும். கணக்கெடுப்பின் படி 3,660,901 டொன் சரக்குகள் இவ்வானூர்தி நிலையத்து ஊடாக ஏற்றி இறக்கப்பட்டுள்ளன.[5].