From Wikipedia, the free encyclopedia
ஹசரத் நிஜாமுதீன் (1238 - 1325) அவர்கள் தெற்காசியாவில் இருந்த இசுலாமிய சூபி ஞானி, இமாம், இஸ்லாமிய அறிஞர் மற்றும் தத்துவஞானி ஆவார்.[1]. இவர் புகழ்பெற்ற சிஷ்தி சூபி ஞானி ஆவார்.[2]
ஹசரத் நிஜாமுதீன் | |
---|---|
(محبوبِ الٰہی) (سُلطان المشائخ) Sultan-ul-Mashaikh, Mehboob-e-Ilahi | |
பிறப்பு | Hazrat Shaikh Khwaja Syed Muhammad கி.பி. 1238 பதாயுன், உத்திரப்பிரதேசம் |
இறப்பு | 3 ஏப்ரல் கி.பி. 1325 நிஜாமுதீன் தர்கா, மேற்கு நிஜாமுதீன், டெல்லி, இந்தியா |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | அமீர் குஸ்ராவ் |
சிஷ்தி மரபில் வந்த சூஃபி துறவி ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா உத்திரப்பிரதேசம் மாநிலம் பதாயூனில் பிறந்தவர். தமது ஐந்தாம் வயதில் தந்தை அகமது பதாயுனியை இழந்தார். பின் தாய் சுலைகாவுடன் தில்லி வந்தார்.[3] முகலாய அரசர் அக்பர் எழுதிய அய்னி-அக்பரி என்னும் நூலில் ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியாவின் வரலாறு உள்ளது.[4] இருபதாம் வயதில் சூபியம் கற்பதற்காக அசோதான் எனும் நகரில் பாபா பரித்துதின் கஞ்ச்சகர் என்று அழைக்கப்படும் சூஃபி ஞானியின் சீடராக 1269 ல் இணைந்தார். பாபா பரித்துதின் சமாதி அடைந்த பிறகு ஹஜரத் நிஜாமுதீன் தில்லிக்கு வந்தார்.[5]
ஹஜரத் நிஜாமுதீன் அவர்களின் சீடரான இந்திய இசையமைப்பாளரும், கல்விமானும், புலவருமான அமீர் குஸ்ராவ் நினைவிடமும் நிஜாமுதீன் தர்கா வளாகத்திலேயே அமைந்துள்ளது.[6]
3 ஏப்ரல் கி.பி. 1325 அன்று தெற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள மேற்கு நிஜாமுதீன் பகுதியில் இறந்தார். அவ்விடத்திலேயே இவரின் அடக்கத்தலம் உள்ளது.[7]
ஹசரத் நிஜாமுதீன் அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் நிஜாமுதீன் தர்கா என்றழைக்கப் படுகிறது. இது தெற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள மேற்கு நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. நிஜாமுதீன் தர்காவில் வருடந்தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்.[7].
ஹசரத் நிஜாமுதீன் அவுலியா அவர்கள் பெயரால் தெற்கு தில்லி மாவட்டத்தில் நிஜாமுதீன் பகுதிக்கு பெயரிடப்பட்டது. நிஜாமுதீன் வட்டாரம் நிர்வாக வசதிக்காக மேற்கு நிஜாமுதீன், கிழக்கு நிஜாமுதீன் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு நிஜாமுதீன் பகுதியில் புகழ்பெற்ற ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.