ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா
From Wikipedia, the free encyclopedia
எஸ். ஜே. தம்பையா என அழைக்கப்படும் ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா (Stanley Jeyaraja Tambiah; 16 சனவரி 1929[2] - 19 சனவரி 2014[3])என்பவர் சமூக மானிடவியலாளரும்[4] ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் ஆவார்.[5] இவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், பௌத்தம், வன்முறையின் மானிடவியல், இனக்குழுமங்களின் வரலாறு, தாய்லாந்து, இலங்கை, மற்றும் தமிழர் போன்றன. இவர் ஆசியப் படிப்புகளுக்கான அமைப்பின் (Association for Asian Studies) முன்னாள் தலைவருமாவார். மானிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு 1997ம் ஆண்டுக்கான பல்சான் பரிசு வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் ஸ்டான்லி ஜெயராஜா தம்பையாStanley Jeyaraja Tambiah, பிறப்பு ...
ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா Stanley Jeyaraja Tambiah | |
---|---|
![]() | |
பிறப்பு | (1929-01-16)சனவரி 16, 1929 யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | சனவரி 19, 2014(2014-01-19) (அகவை 85) கேம்பிரிட்ச், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | இலங்கையர், அமெரிக்கர் |
துறை | மானிடவியல் |
பணியிடங்கள் | இலங்கைப் பல்கலைக்கழகம் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | இலங்கைப் பல்கலைக்கழகம் கோர்னெல் பல்கலைக்கழகம் |
தாக்கம் செலுத்தியோர் | எட்மண்ட் லீச்[1] |
விருதுகள் | பல்சான் பரிசு (1997) ஃபுகோக்கா ஆசியக் கலாச்சார விருது (1998) |
மூடு