ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)
இந்திய திரைப்பட இயக்குநர் / From Wikipedia, the free encyclopedia
ஷங்கர் (ஆங்கிலம்: Shankar) (பிறப்பு: ஆகத்து 17[1], 1963) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
விரைவான உண்மைகள் ச. சங்கர், இயற் பெயர் ...
ச. சங்கர் | |
---|---|
இயற் பெயர் | ஷங்கர் சண்முகம் |
பிறப்பு | ஆகத்து 17, 1963 (1963-08-17) (அகவை 60) கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
தொழில் | இயக்குநர், தயாரிப்பாளர் |
நடிப்புக் காலம் | 1990-தற்போது |
இணையத்தளம் | http://www.directorshankar.com/ |
மூடு