வெண்களிமண்
From Wikipedia, the free encyclopedia
கயோலினைட்டு (Kaolinite) [4],என்பது ஒருவகையான களிமண் கனிமமாகும். வெண்களிமண் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். தொழிற்துறை தாதுக்கள் என அழைக்கப்படும் கனிமங்களின் குழுவில் கயோலினைட்டும் ஒன்றாகும். Al2Si2O5(OH)4 என்ற வேதிச்சேர்மங்களின் இயைபில் கயோலினைட்டு உருவாகியுள்ளது[5].. ஒரு நான்முகித் தகடாக உள்ள சிலிக்கா (SiO4) ஆக்சிசன் அணுக்கள் வழியாக ஓர் எண்முகத் தகடாக உள்ள அலுமினாவுடன்[6] (AlO6) இணைக்கப்பட்டு அடுக்கடுக்காக கயோலினைட்டு உருவாகிறது. கயோலினைட்டு அதிகமாக உள்ள பாறைகளை கயோலின் அல்லது சீனா களிமண் என்ற பெயரால் அழைக்கிறார்கள்[7].
கயோலினைட்டு Kaolinite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பைலோசிலிக்கேட்டு கயோலினைட்டு |
வேதி வாய்பாடு | Al2Si2O5(OH)4 |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை, சிலசமயங்களில் சிவப்பு, நீலம் அல்லது பழுப்பு |
படிக இயல்பு | அரிதாக படிகங்கள்,மெல்லிய தட்டுகள்,பொதுவாக நுண் அறுகோணத் தட்டுகள் |
படிக அமைப்பு | முச்சரிவு |
பிளப்பு | சரிசமம் {001} |
விகுவுத் தன்மை | நெகிழ்வு மற்றும் மீள்தன்மை அல்லாமல் |
மோவின் அளவுகோல் வலிமை | 2–2.5 |
மிளிர்வு | முத்து முதல் மக்கிய மண் வரை |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒப்படர்த்தி | 2.16–2.68 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (–) |
ஒளிவிலகல் எண் | nα = 1.553–1.565, nβ = 1.559–1.569, nγ = 1.569–1.570 |
2V கோணம் | அளக்கப்பட்டது: 24° முதல் 50°, கணக்கிடப்பட்டது: 44° |
மேற்கோள்கள் | [1][2][3] |
வெண்களிமண் | |||||||||||
பண்டைய சீனம் | 高嶺石 | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
நவீன சீனம் | 高岭石 | ||||||||||
Literal meaning | "Gaoling stone" | ||||||||||
|
கயோலின் என்ற பெயர் தென்கிழக்கு சீனாவின் சியாங்சி மாகாணத்தின் சிங்டேசெனின் அருகே உள்ள ஒரு சீன கிராமத்தின் பெயரிலிருந்து வந்ததாகும்[8]. சிங்டேசெனின் நகரிலிருந்து பிராங்கோயிசு சேவியர் டி எண்ட்ரிகோலல்சு அறிக்கையைத் தொடர்ந்து கயோலின் என்ற இந்தச் சொல் பிரெஞ்சு வழியாக 1727 ஆம் ஆண்டில் ஆங்கில மொழிக்கு வந்துள்ளது [9].
கயோலினைட் ஈரமாக உள்ளபோது விரிவடைந்தும் உலர்நிலையில் சுருங்கியும் காணப்படும் பண்பைப் பெற்றுள்ளது. மேலும் குறைவான நேர்மின்மயனி பரிமாற்றத் திறனும் (1-15 மில்லிசம / 100 கிராம்) கொண்டிருக்கிறது. இது பெல்சுபார் போன்ற அலுமினிய சிலிக்கேட் கனிமங்கள் வேதியியல் முறையில் அரிப்பு மற்றும் சிதைவு அடைந்து உருவாகிறது. மென்மையான, மண் போன்று பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும் கனிமமாகும். உலகின் பல பகுதிகளிலும் இது இரும்பு ஆக்சைடு மூலம் இளம் சிவப்பு -ஆரஞ்சு-சிவப்பு நிறத்தினை ஏற்று தனித்துவமான துரு நிறத்தில் காணப்படுகிறது. இலகுவான செறிவு கொண்டுள்ள போது வெள்ளை, மஞ்சள், அல்லது வெளிர் ஆரஞ்சு வண்ணங்களில் காணப்படுகிறது. ஐக்கிய மாகாணத்தின் சியார்சியாவில் கேன்யன் மாநிலப் பூங்காவில் இருப்பதைப் போல மாற்று அடுக்குகள் கொண்டும் சில நேரங்களில் காணப்படுகிறது. உலர்ந்த தூள், அரை உலர்ந்த வற்றல் துணுக்கு அல்லது திரவ குழம்பு போன்ற வடிவங்களில் கயோலின் வணிக வகையாக வழங்கப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் வெண்களிமண் கனிமத்தை Kln[10] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.