![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/V._Dakshinamoorthy.jpg/640px-V._Dakshinamoorthy.jpg&w=640&q=50)
வெ. தட்சிணாமூர்த்தி
கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் இந்திய இசையமைப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
தவில் இசைக்கலைஞர் பற்றிய கட்டுரைக்கு, வி. தெட்சணாமூர்த்தி என்பதைப் பாருங்கள்.
வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி (மலையாளம்: വി ദക്ഷിണാമൂര്ത്തി; 9 டிசம்பர் 1919 - 2 ஆகஸ்ட் 2013) ஒரு கருநாடக இசைக்கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.[2][3]
விரைவான உண்மைகள் சங்கீத சரசுவதி வெ. தட்சிணாமூர்த்தி, பிறப்பு ...
சங்கீத சரசுவதி வெ. தட்சிணாமூர்த்தி | |
---|---|
![]() | |
பிறப்பு | வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி (1919-12-09)திசம்பர் 9, 1919 [1] ஆலப்புழா, கேரளம் |
இறப்பு | ஆகத்து 2, 2013(2013-08-02) (அகவை 93) மைலாப்பூர், சென்னை தமிழ்நாடு |
தேசியம் | ![]() |
குடியுரிமை | ![]() |
பணி | இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1950 - 2013 |
அறியப்படுவது | இசையமைப்பாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | பார்வதி அம்மாள், வெங்கடேசுவர ஐயர் |
விருதுகள் | சிறந்த இசையமைப்பாளருக்கான கேரளா மாநில திரைப்பட விருது; சுவர்ணமால்யா யேசுதாசு விருது; கேரளா மாநிலத்தின் தானியல் வாழ்நாள் சாதனை விருது; மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தின் கௌரவ முனைவர் பட்டம் |
மூடு