விளிம்படி வெடிபொதி
From Wikipedia, the free encyclopedia
விளிம்படி வெடிபொதி என்பது, சுடுகலனின் உலோக வெடிபொதிகளை எரியூட்டும் வழிமுறை ஆகும். இவ்வகை வெடிபொதிகளை, "விளிம்படி" என்றும் சுருக்கமாக அழைப்பர். எரியூட்டியை பற்றவைப்பதற்காக, (வெடிபொதியின்) அடித்தட்டின் விளிம்பானது, துப்பாக்கியின் வெடியூசியால் அடித்து நொறுக்கப்படுவதால், இது விளிம்படி என்று அழைக்கப்படுகிறது. இது மிக பொதுவான நடுவடி (எனப்படும், அடித்தட்டின் நடுவிலுள்ள எரியூட்டிச் சிமிழை வெடியூசியால் அடிக்கும்) முறைக்கு மாறானது. விளிம்படி வெடிபொதியின் விளிம்பு என்பது, எரியூட்டிச் சேர்மத்தை கொண்டுள்ள தட்டும்-மூடி ஆகும், வெடிபொதியுள் உந்துபொருட்களும், எறியமும் (தோட்டா) இருக்கும். ஒருமுறை (வெடிபொதியின்) விளிம்பு அடிக்கப்பட்டு தோட்டா சுடப்பட்டபின், மறுமுறை அதில் மீள்குண்டேற்றம் செய்ய இயலாது, ஏனெனில் வெடியூசியின் முதல் தாக்கத்திலேயே விளிம்பு நெளிந்துவிடும்.