![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/46/Vijay_At_The_Jilla_100_days_celebrations_event_1.jpg/640px-Vijay_At_The_Jilla_100_days_celebrations_event_1.jpg&w=640&q=50)
விஜய் (நடிகர்)
இந்திய நடிகர் மற்றும் பாடகர் / From Wikipedia, the free encyclopedia
விஜய் (ஆங்கில மொழி: Vijay, பிறப்பு: சூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்[1]) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் இவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா,[2] சப்பான்[3], ஐக்கிய இராச்சியம்[4] மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.[5] இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.[6][7]
விஜய் | |
---|---|
![]() 2014இல் விஜய் | |
தலைவர், தமிழக வெற்றிக் கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | பதவி நிறுவப்பட்டது |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தமிழக வெற்றிக் கழகம் |
துணைவர் | சங்கீதா சொர்ணலிங்கம் (1999-தற்போது) |
பிள்ளைகள் | ஜேசன் சஞ்சய் திவ்யா சாஷா |
பெற்றோர் | |
வேலை | திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், நடன அமைப்பாளர், பின்னணிப் பாடகர் |
கையெழுத்து | ![]() |
விஜய் தனது 10ஆவது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ஆம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.[8][9] இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விசய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கியப் பேரரரசின் நாட்டு திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.[10]
ஒரு பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த ஆடல் கலைஞர்.[11] இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா[12], ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா[13] மற்றும் தென்கொரியாவின் புச்சியான் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.[14]