![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/VishalSikkaSapphireOrlando2010.jpg/640px-VishalSikkaSapphireOrlando2010.jpg&w=640&q=50)
விசால் சிக்கா
From Wikipedia, the free encyclopedia
விசால் சிக்கா (Vishal Sikka) என்பவர் ஓர் இந்திய அமெரிக்கர். இன்போசிஸ் குழுமத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாகவும் மேலாண் இயக்குநராகவும் பதவியில் இருந்தவர். 2017 ஆகத்து 18 இல் அப்பொறுப்புகளிலிருந்து விலகினார். தற்போது இன்போசிசின் செயல் துணைத் தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார்.[1] 2017 ஆம் ஆண்டுக்குரிய மிகு அதிகாரம் கொண்ட மனிதர்களில் சிக்கா 32 ஆவது எண்ணில் உள்ளதாக இந்தியா டுடே கணித்துள்ளது.[2] இன்போசிசு குழுமத்தில் சேருவதற்கு முன்பு சாப் என்ற செருமானிய மென்பொருள் பன்னாட்டுக் குழுமத்தில் உயர் பதவிகளில் இருந்து 12 ஆண்டுகள் பணியாற்றினார். விசால் சிக்கா 2014 மே மாதத்தில் சாப் நிறுவனத்திலிருந்து விலகி 2014 சூன் மாதத்தில் இன்போசிசு குழுமத்தில் சேர்ந்தார்
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/VishalSikkaSapphireOrlando2010.jpg/640px-VishalSikkaSapphireOrlando2010.jpg)