விக்கிமீடியா பொதுவகம்
இணையத்தில் இருக்கும் கட்டற்ற ஊடகக் கோப்பகம் / From Wikipedia, the free encyclopedia
விக்கிமீடியா பொதுவகம் (Wikimedia Commons) அல்லது பொது எனப்படுவது கட்டற்ற உள்ளடக்கம் உடைய படங்கள், ஒலிக் கோப்புக்கள், காணொலிகள் மற்றும் ஏனைய ஊடகங்கள் கொண்ட இணையக் களஞ்சியம் ஆகும்.[1] இது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டமாகும்.
விரைவான உண்மைகள் வலைத்தள வகை, தோற்றுவிப்பு ...
வலைதளத்தின் தோற்றம் விக்கிமீடியா பொதுவக முதற் பக்கம் திரைபிடிப்பு | |
வலைத்தள வகை | ஊடகக் களஞ்சியம் |
---|---|
தோற்றுவிப்பு | செப்டம்பர் 7, 2004; 19 ஆண்டுகள் முன்னர் (2004-09-07) |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
உருவாக்கியவர் | விக்கிப்பீடியா சமூகம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விரும்பினால் (கோப்புக்களைப் பதிவேற்றலாம்) |
உள்ளடக்க உரிமம் | கட்டணமில்லா பொது உரிமம் |
தற்போதைய நிலை | இணையத்தில் |
உரலி | commons |
மூடு
விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ள கோப்புக்களை விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிமூலம், விக்கியினங்கள், விக்கிசெய்தி, விக்கிப்பயணம் உட்பட்ட சகல விக்கிமீடியாத் திட்டங்களிலும், சகல மொழிகளிலும் பயன்படுத்த முடியும்.[2] அல்லது இணையத் தொடபற்ற பாவனைக்காக தரவிறக்கம் செய்ய முடியும். மார்ச் 2021 இன்படி, இக்களஞ்சியம் 70 மில்லியனுக்கு மேற்பட்ட ஊடகக் கோப்புக்களைக் கொண்டுள்ளது.[3] சூலை 2013 இல், பொது 100,000,000 தொகுப்புக்களை எட்டியது.[4]