விக்கிப்பீடியா பேச்சு:விக்கிமீடியா அறக்கட்டளை ஊடாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்
From Wikipedia, the free encyclopedia
https://meta.wikimedia.org/wiki/Community_Capacity_Development#Phase_2:_Community_discussion பாருங்கள். இதன் மூலமாக ஆறு தகுந்த புலங்களில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உதவ விக்கிமீடியா அறக்கட்டளை முன்வந்திருக்கிறது. இவற்றில் எந்தப் புலங்கள் நமக்குத் தகும், என்ன உதவிகள் தேவை என்று நாம் விரிவாக உரையாடி ஒரு சுருக்கத்தை விக்கிமீடியா அறக்கட்டளைக்குப் பரிந்துரைத்தால், அவர்கள் மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
- On-wiki technical skills
- Communications
- Partnerships
ஆகிய மூன்று புலங்களில் நாம் உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறேன். இவற்றின் சில செயற்றிட்டங்கள் ஏற்கனவே நாம் த. இ. க. மூலம் முன்னெடுக்க விரும்பும் பணிகளுடனும் ஒன்றிணைந்து செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.--இரவி (பேச்சு) 11:52, 25 ஆகத்து 2015 (UTC)
- கருத்து தேவை. குறிப்பாக, இலங்கையைக் களமாகக் கொண்டு சிறப்புப் பயிற்சிகள், வளங்களை உருவாக்க வாய்ப்பும் தேவையும் உண்டு என்று எண்ணுகிறேன். உங்கள் பரிந்துரைகளை அளிக்க வேண்டுகிறேன். கவனிக்க: @AntanO, சஞ்சீவி சிவகுமார், Shrikarsan, Kanags, மதனாஹரன், Booradleyp1, and Surya Prakash.S.A.: @Aathavan jaffna, Dineshkumar Ponnusamy, Balurbala, Commons sibi, Parvathisri, Mahir78, and Mohamed ijazz: @Semmal50, தமிழ்க்குரிசில், Mayooranathan, Sundar, Natkeeran, Kurumban, and Rsmn: @Kalaiarasy, Sivakumar, Sivakosaran, Selvasivagurunathan m, Ksmuthukrishnan, Seesiva, and Shanmugamp7: @George46, Jayarathina, and Chandravathanaa:. --இரவி (பேச்சு) 06:06, 30 ஆகத்து 2015 (UTC)
வணக்கம், Community governance, Conflict management, On-wiki technical skills, New contributor engagement and growth, Partnerships Communications என அனைத்து நம் தமிழ் விக்கிப்பீடியாவிற்குத் தேவை என்று எண்ணுகிறேன். நாம் புதுப்பயனர்களை தொடர்ந்து ஊக்குவிக்க, எனக்குத் தெரிந்தவரையிலும் எதுவும் செய்ய இயலவில்லை என்றே எண்ணுகிறேன். இது வரை Conflict management குறித்த தேவைகள் அவ்வளவாக இல்லாமல் இருந்தாலும் தமிழ் விக்கிப்பீடியா இனி வரும் காலங்களில் பலமடங்கு பயனர்களைப் பெரும்பொழுது இதனுடைய அவசியம் அதிகரிக்கும். ஏற்கனவே ஒருசில பிணக்குகள் வந்தபின் கொள்கைகளை வகுத்திருக்கிறோம்; இனிவரும் காலங்களில் அனைத்தும் தேவையான அளவில் வைத்துக் கொண்டால் நிச்சயம் பயனுள்ளதாகவே இருக்கும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:05, 31 ஆகத்து 2015 (UTC)
- சமூக ஆளுமை, முரண் மேலாண்மை, விக்கியில் தொழில்நுட்ப திறன்கள், புதிய பங்களிப்பாளர்களை ஊக்குவித்தல் மற்றும் வளர்த்தல், ஆகிய நான்கு பகுதிகளில் அதிக உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
- புதிய பங்களிப்பாளர்களை ஊக்குவித்தல் மற்றும் வளர்த்தல் பகுதியில் புதிய பங்களிப்பாளர்களை கொண்டு வரவும், பயிற்சியளிக்கவும், ஊக்குவிக்கவும், வளர்த்து விடவும் வேண்டிய கடப்பாடு உள்ளது.
- முரண் மேலாண்மைப் பகுதியில் மாற்றுக் கருத்துகளை உள்வாங்குதல், சிக்கல் தீர்த்தல், முரண்பாடுகளை களைதல், பொது உடன்பாட்டுக்கு வருதல், பக்கச்சார்பற்ற வழிமுறைகளை தோற்றுவித்தல், பின்பற்றல் போன்றவைகள் அதிகம் தேவைப்படுகின்றது.
- சமூக ஆளுமையில் அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு பொதுத் தளத்தில் இயங்கவல்ல கொள்கைகளை வகுப்பதும் தேவையான ஒன்று.
- விக்கியில் தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்வதும், புதியர்களுக்கு அவற்றை விரைவாக கற்றுக் கொடுக்கவும் போதுமான கையேடுகள் இல்லை, பெரும்பாலானவை ஆங்கிலத்திலேயே உள்ளது. அவற்றை அனைவருக்கும் புரியும் வண்ணம் தமிழில் மொழியாக்கம் செய்யவோ, உருவாக்கவோ வேண்டும். மொழிக் கொள்கைகளில் அதிக இறுக்கம் காணப்படுவதை தவிர்க்க வேண்டும், அதற்கு இசைவாக மொழி மாற்றம் செய்யவும், மொழிப் பயன்பாட்டை செவ்வனே கற்கவும் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ளவும் உதவி வேண்டும். --விண்ணன் (பேச்சு) 10:24, 2 செப்டம்பர் 2015 (UTC)
அனைவரின் கருத்துகளுக்கும் நன்றி. 2, 3 வாரங்களில் இவ்வாய்ப்பினை முன்வைத்து விக்கிச்சமூகத்துடன் உரையாடி ஏதேனும் ஒரு புலத்தின் கீழ் முதற்கட்டமாக பணித்திட்டம் அல்லது தேவையைச் சுட்டுமாறு விக்கிமீடியா அறக்கட்டளையில் கேட்டிருந்தார்கள். பொதுவாக, ஆறு புலங்களின் கீழும் இவற்றை ஊடறுத்தும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான தேவைகள் உள்ளன என்பதே உண்மை. குறிப்பாக, பல நாட்கள் பங்களித்து வரும் பலருக்குமே ஒரு சில விடயங்களில் கூடுதல் தெளிவு தேவைப்படுவதைக் கடந்த இரண்டு மாதங்களில் பலரையும் சந்தித்து உரையாடி போது உணர முடிந்தது.
எனவே, என்னுடைய பரிந்துரை:
தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான ஒரு மூன்று நாள் பயிற்சி முகாம் நடத்தலாம். இதில் எழுத்தாற்றல், மொழிபெயர்ப்பு, ஒளிப்படம் எடுத்தல், விக்கிமீடியா அமைப்பு முறை, பரப்புரைக்குத் தேவைப்படும் திறன்கள், அடிப்படை விக்கி நுட்பங்கள் முதலிய பல்வேறு பயிற்சிகளை அளிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Train_the_Trainer_Program/2015 பாருங்கள்.
இலங்கையில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கவனத்தைக் கூட்டும் வகையிலும், இலங்கை - இந்தியா பயனர்கள் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையிலும் இப்பயிற்சியை இலங்கையில் வைத்து நடத்தலாம் என்பது என் ஆவல். இடர்கள் என்று பார்த்தால்: அ) பலரும் முதல் முறையாக கடவுச்சீட்டு எடுக்க வேண்டி வரலாம். ஆ) செலவு கூடுதல் என்றோ தனித்தனியாக இரு நாடுகளில் இரு பயிற்சிகள் நடத்தலாம் என்றோ விக்கிமீடியா அறக்கட்டளை கருத இடமுண்டு. ஆனால், இரு நாட்டுப் பயனர் நல்லுறவை வலியுறுத்தி இக்கவலையைத் தவிர்க்கலாம். இ) இலங்கையில் இதனைப் பொறுப்பெடுத்துச் செயற்படுத்த ஒரே நகரில் அல்லது அருகமை நகர்களில் அமைந்த விக்கிப்பீடியர்கள் குழு அல்லது ஒத்த கருத்துள்ள ஆர்வலர்கள் தேவை. ஒரு கல்வி நிறுவன ஆதரவும் இருந்தால் நன்றாக இருக்கும். ஈ) இது தொடர்பான செலவுகளுக்கு விக்கிமீடியா அறக்கட்டளையில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதில் சிக்கல் வருமா? முன்பு வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதில் சிக்கல் இருந்தது. செலவுத் தொகையைப் பொறுத்து ஒரு சில விக்கிப்பீடியர்களின் கூட்டுக் கணக்குக்கோ பல்கலைக்கழகம் போன்ற ஆதரவாளரின் கணக்குக்கோ பணத்தை அனுப்பி வைக்கக் கோர முடியும்.
ஆகக்கூடுதலாக 30 முதல் 40 பேர் வரை இத்தகைய பயிற்சியில் பங்கேற்பது வினைத்திறம் மிக்கதாக இருக்கும். குறைந்தது 500 முதன்மைவெளித் தொகுப்புகள் செய்துள்ள விக்கிப்பீடியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். தகுந்த பயிற்சிகளை அளிக்கக் கூடியவர்களை இந்தியாவில் இருந்தும் வர வைக்கலாம்.
பல தமிழ்நாட்டு விக்கிப்பீடியர்களும் இலங்கையைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய ஒரு பயிற்சி இலங்கையில் அமைவது பல்வேறு வகையில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன். அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 19:25, 10 செப்டம்பர் 2015 (UTC)
- "இலங்கை - இந்தியா பயனர்கள் இடையே நல்லுறவை வளர்ப்பது" நல்நோக்கு எனினும், பல பயனர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சென்று இத்தகைய பயிற்சியில் கலந்து கொள்வது efficient ஆன செலவீனமாக நான் கருதவில்லை. பயணம் தவிர்த்து தங்குமிடம், உணவு வசதிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், இலங்கையில் எங்கு வைப்பது (கொழும்பில்/மலையகத்தில்/கிழக்கில்/யாழில்) என்ற கேள்வியும் எழுகிறது. அதே செலவில் கூடிய எண்ணிக்கையான பயிற்சிப் பட்டறைகளை பல இடங்களில் நடத்துவதும், நல்லுறவை மேம்படுத்தக் கூடிய வேறு செயற்திட்டங்களை மேற்கொள்வதும் பயன்மிக்கதாக அமையும் என்று கருதுகிறேன். (தேவையானால் "தகுந்த பயிற்சிகளை அளிக்கக் கூடியவர்களை இந்தியாவில் இருந்தும் வர வைக்கலாம்.") மேலும், இந்தியா - இலங்கை என்று மட்டுமன்றி கணிசமான தமிழர்கள் வாழும், தமிழ் வழிக் கல்வி இருக்கும் மலேசியாவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 20:07, 10 செப்டம்பர் 2015 (UTC)
- Natkeeran, சற்று வெளிப்படையாகவே பேசுவோமே? தமிழ் விக்கிப்பீடியா ஒரு முக்கியக் கட்டத்தைக் கடக்கும் நிலையில் இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கம் முதலே இலங்கையைச் சேர்ந்த விக்கிப்பீடியர்களின் பங்களிப்பு கணிசமானதாக இருக்கிறது. மற்ற பல விக்கிப்பீடியாக்களைப் போல் அல்லாமல் தமிழ் விக்கிப்பீடியர்களின் ஒற்றுமை பேணப்பட தொடக்கக் கால தமிழ் விக்கிப்பீடியர்களின் முதிர்ச்சியும் ஒரு காரணம். பன்னாட்டுத் தமிழர்களுடனான நேரடிப் பழக்கம் இந்த முதிர்ச்சிக்கும் தெளிவுக்கும் முக்கியக் காரணம் ஆகும். நான் ஐரோப்பாவில் படித்த, வேலை பார்த்த காலத்தில் நேரடியாகப் பார்த்துப் பழகிய பல இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் ஈழத் தமிழர்களின், மொழி, பண்பாடு பற்றிய என்னுடைய புரிதலைப் பெரிதும் மேம்படுத்தியது. ஆனால், அத்தகைய புரிதல், ஒரு முறையேனும் இலங்கைத் தமிழர்களுடன் நேரடியாகப் பழகாமலோ இலங்கையையேனும் பார்க்காமலோ அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கும் கை கூடும் என்று நான் எண்ணவில்லை. ஆனால், அதற்கான தேவையை இப்போது உணர்கிறேன். இதே பயிற்சியை தமிழகத்தில் நடத்தி இலங்கையைச் சேர்ந்த பயனர்களை இங்கு வரவும் அழைப்பு விடுக்கலாம். ஆனால், முனைப்பாகப் பங்களிக்கும் பல இளம் வயது பங்களிப்பாளர்கள் வர இயலாமல் போகலாம். குறைவானவர்களே கலந்து கொள்ளும் நிலை வரலாம் (தமிழ்விக்கி10 கொண்டாட்டத்தில் மூன்று பயனர்களே கலந்து கொள்ள முடிந்தது). இதை எல்லாம் தாண்டி தமிழகத்தைச் சேர்ந்த பயனர்கள் இலங்கையை நேரில் கண்டு வருவது பல வகையிலும் புரிதலை மேம்படுத்தும். அதனை நானே 2013 இலங்கைப் பயணத்தின் போது உணர்ந்தேன். செலவு கூடலாம். சற்று செயற்றிறன் சிக்கல்கள் வரலாம். எனினும், இது தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு மட்டுமேயான நிகழ்வு என்பதால் இதனை மேம்படுத்தி முன்னகர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பரப்புரையை முன்னிட்டு ஒரு அரை நாள் பொது நிகழ்வாக ஊடகங்களை அழைத்தும் நிகழ்ச்சி நடத்தலாம்.
எனவே,
1. விக்கிப்பீடியர்கள் திறன் மேம்பாட்டுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் என்பது முதற் பரிந்துரை - இதற்கு அனைவர் ஆதரவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
2. இம்முகாமை இலங்கையில் நடத்த முன்னுரிமை தரலாம் என்பது இரண்டாவது பரிந்துரை - இதில் கருத்தளவில் சிக்கல்கள் இல்லை. ஆனால், யாரேனும் களப் பணிகள், ஒருங்கிணைப்புக்கு பொறுப்பெடுத்து நடத்த முன்வர வேண்டும். ஆதரவு தரக்கூடிய கல்வி நிறுவனமும் பங்களிப்பாளர்களும் இலங்கையின் எந்த நகரில் இருந்தாலும் சரி. அங்கு நடத்தலாம். இணையம் மூலமாகச் செய்யக்கூடிய ஒருங்கிணைப்புப் பணிகளை அனைவரும் கலந்து செய்வோம். இதன் மூலம் களத்தில் உள்ளவர்களுக்கான சுமையைக் குறைக்கலாம்.
--இரவி (பேச்சு) 03:07, 11 செப்டம்பர் 2015 (UTC)
இலங்கையில் இப்பயிற்சியை நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து உங்கள் கருத்து தேவை: @AntanO, சஞ்சீவி சிவகுமார், Shrikarsan, மதனாஹரன், Aathavan jaffna, Mohamed ijazz, Sivakosaran, Mayooranathan, and கோபி: --இரவி (பேச்சு) 07:05, 14 செப்டம்பர் 2015 (UTC)
இலங்கையில் பன்னாட்டு அளவிலான விக்கிப் பட்டறை ஒன்றை நடாத்துவது பயனர்களைக் கவருதல் மற்றும் நிலைத்திருக்கச் செய்தலில் பெருமளவு பங்களிக்கும் என்றே கருதுகின்றேன். எங்கு நடாத்தலாம், ஒருங்கிணைப்பில் பங்குகொள்ளக் கூடிய ஆளணிவளம் ,பயிற்சி இலக்கு மற்றும் உள்ளடக்கம் என்பன குறித்து தீர்க்கமாக முடிவெடுப்பதும் செயற்படுத்துவதில் பங்களிக்க உறுதியளிப்பதும் அவசியமாகும். எனக்கு ஓரிரு நாட்களை ஒதுக்கிச் செயற்பட முடியும். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 18:28, 14 செப்டம்பர் 2015 (UTC)
- நன்றி, சஞ்சீவி சிவகுமார். உங்கள் பல்கலையில் இதனை ஒருங்கிணைக்க முடியுமா என்பது தான் என்னுடைய முதல் நம்பிக்கை / எதிர்பார்ப்பு :) நூலகம் திட்டம் ஒருங்கிணைத்த ஆவண மாநாடு போல் கொழும்பில் நடத்தினால், நடைமுறை ஏற்பாடுகள் இலகுவாக இருக்கலாம். ஆனால், திட்டமிட்டுள்ள பொது மக்களுக்கான அரை நாள் நிகழ்வில் பெருவாரியான தமிழ் ஊடகங்கள், தமிழர்களைச் சென்று சேரும் வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. கவனிக்க: @ஜெ.மயூரேசன், உமாபதி, and மு.மயூரன்:--இரவி (பேச்சு) 06:57, 15 செப்டம்பர் 2015 (UTC)
இடம், ஏற்பாட்டுக் குழு முதலியவற்றை முடிவு செய்ய இன்னும் காலம் தேவைப்படும் என்று உணர்கிறேன். எனவே, மேலும் தாமதப்படுத்தாமல் இத்தகைய ஒரு பயிற்சி தேவைப்படுகிறது என்பதை மட்டும் இப்போது ஒரு முன்மொழிவாக விக்கிமீடியா அறக்கட்டளைக்குத் தெரிவிக்கிறேன். மற்ற விவரங்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். எப்படியும் இது தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய விக்கிமீடியா அறக்கட்டளைக்கும் சற்று காலம் பிடிக்கும். --இரவி (பேச்சு) 15:47, 16 செப்டம்பர் 2015 (UTC)
- ஆம் இரவி. முன்மொழிவு குறித்த ஆதரவைப் பெற்றபின்/ பெறும் செயற்பாட்டை ஆரம்பித்த பின் இடம் பற்றிய கருத்துகளைப் பெற்று முடிவெடுப்போம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:45, 17 செப்டம்பர் 2015 (UTC)