From Wikipedia, the free encyclopedia
விக்கிப்பீடியா அடையாளச் சின்னம் ஓர் இணைய அடிப்படையிலான பல்மொழி கலைக்களஞ்சியத்தின், அறுபட்ட புதிர்த் துண்டுகளால் கட்டப்பட்ட முடிவுறாத உலகம். சில துண்டுகள் மேற்பகுதியில் காணப்படவில்லை. சில துண்டுகளில் பல வேறுபட்ட எழுத்து முறைகளின் எழுத்து அமைப்பு வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இணைப் பக்கத்தில் உள்ளவாறு காணப்படும் அடையாளச் சின்னத்தின் கீழ் விக்கிப்பீடியா என்ற பதமும் அதன் கீழ் “கட்டற்ற கலைக்களஞ்சியம்” என்பதும் காணப்படும்.[1][2]
ஒவ்வொரு துண்டும் ஒரு எழுத்து வடிவமைப்பைக் கொண்டு விக்கிப்பீடியா ஒரு பல்மொழி கலைக்களஞ்சியம் என்பதைக் குறித்து நிற்கின்றது. இதில் சிரில்லிக் எழுத்து И, கிரேக்க எழுத்து Ω, அங்குல் எழுத்து 위, சீன எழுத்து 維, தேவநாகரி எழுத்து वि, வங்காள எழுத்து উ, கன்னட எழுத்து ವಿ, எபிரேய எழுத்து ו, ஆர்மேனிய எழுத்து Վ, கெமர் எழுத்து វិ, அரபு எழுத்து و, சியார்சிய எழுத்து ვ, தாய் எழுத்து วิ, திபெத்திய எழுத்து ཝི, கீஸ் எழுத்து ው, ஜப்பானிய எழுத்து ウィ, தமிழ் எழுத்து வி, மற்றும் இலத்தீன் எழுத்து W என்பன இடம் பெற்றுள்ளன.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Seamless Wikipedia browsing. On steroids.