விக்கிப்பீடியா:கண்ணியம்
From Wikipedia, the free encyclopedia
எப்போதும் உதவிட முனைப்பாகவும் தீங்கு செய்யாதிருக்கவும் முயலுங்கள். விக்கிப்பீடியாவை உருவாக்குவதில் அனைவருக்கும் பங்குண்டு. கருத்து வேறுபாடுகள் தோன்றும்போது விவாதங்கள் நிகழ்வது இயல்பே. இவை கண்ணியத்துடன் நிகழ்வது இன்றியமையாதது. ஆனால் விவாதங்களின் தீவிரத்தில் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும். விக்கிப்பீடியாவின் செயல்பாட்டிற்கு இப்போக்கு ஊறு விளைவிக்கும்:
- கண்ணியமற்ற செயல்பாடு பிற பயனர்களை துயரமடையச் செய்யும். அவ்வாறு துயருற்ற பயனர்கள் பங்களிக்காது விலகக் கூடும்.
- சிலரைக் கோபமடையச் செய்யும். கோபமடைந்தவர்கள் உதவிகரமாக இல்லாது பிறரையும் கோபமடையச் செய்வர்.
- கோபமுற்றவர் பிறரின் காரணங்களைக் கேட்க ஆயத்தமாக இருக்க மாட்டார்கள். இதனால் ஓர் உடன்பாடு காணுதல் மேலும் கடினமாகும்.
- ஒருவர் ஏற்படுத்திய மாற்றங்களை மட்டுமே பேச வேண்டும், அவர்களைப் பற்றியல்ல.
- எப்போதுமே கண்ணியக் குறைவோடு செயல்பட்டால் தடை செய்யப் படலாம்.
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் |
---|
ஐந்து தூண்கள் |
தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம் |
நடுநிலை நோக்கு |
தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல் |
கண்ணியம் |
![]() | இப்பக்கம் சுருக்கமாக:
|