இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
வி. சண்முகநாதன் (பிறப்பு: 21 நவம்பர் 1949) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார்.
வி. சண்முகநாதன் V Shanmuganathan | |
---|---|
மேகாலயா மாநில ஆளுநர் | |
பதவியில் 12 மே 2015 – 27 சனவரி 2017 | |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி இந்தியக் குடியரசுத் தலைவர் |
முன்னையவர் | கேசரிநாத் திரிப்பாதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 நவம்பர் 1949 தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
வாழிடம்(s) | சில்லாங், மேகாலயா |
முன்னாள் கல்லூரி | சென்னைப் பல்கலைக்கழகம் |
1949 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூரில் பிறந்தார். 1970 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகத் தலைவர் மீனாட்சிசுந்தரத்திடம் தங்கப்பதக்கம் பெற்றார். அதன்பின் 1962 ஆம் ஆண்டு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் சேர்ந்தார். பாரதிய ஜனதா கட்சியில் 2003 ஆம் ஆண்டு சேர்ந்த இவருக்குப் பல பதவிகள் கொடுக்கப்பட்டன. தமிழில் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.[1]
மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த சையது அகமது மரணம் அடைந்ததை அடுத்து இவர் 2015 அக்டோபர் 1 முதல் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.[2][3] இவர் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் திகதி தனது ஆளுநர் பதவியிலிருந்து ராஜினமா செய்தார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.