வால்ட் திசினி கம்பனி (Walt Disney Company) உலகின் இரண்டாவது பெரிய[3], அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வாலுடு திசினியின் தாக்கம் கணிசமானது.

விரைவான உண்மைகள் வகை, முந்தியது ...
வாலுடு திசினி நிறுவனம்
வகைபொதுப் பங்கு நிறுவனம்
முந்தியதுலாஃப்-ஓ-கிராம் சிடுடியோ (1921–1923)
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்பாப் இகெர் (தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர்)
கிறிசிடின் மெக்கார்த்தி (தலைமை நிதி அதிகாரி)
தொழில்துறை
உற்பத்திகள்தொலைக்காட்சி
வெளியீட்டு
திரைப்படங்கள்
இசை
வீடியோ விளையாட்டுகள்
பொழுதுபோக்கு பூங்காக்கள்
ஒளிபரப்பு
வானொலி
வலை இணையதளங்கள்
சேவைகள்உரிமம் வழங்குதல்
வருமானம்Increase ஐஅ$59.434 பில்லியன்
இயக்க வருமானம்Increase ஐஅ$15.706 பில்லியன்
நிகர வருமானம்Increase ஐஅ$12.598 பில்லியன்
மொத்தச் சொத்துகள்Increase ஐஅ$98.598 பில்லியன்
மொத்த பங்குத்தொகைIncrease ஐஅ$52.832 பில்லியன்
பணியாளர்201,000
பிரிவுகள்
  • வாலுடு திசினி சிடூடியோசு
  • திசினி மீடியா நெட்வொர்க்ஸ்
  • திசினி பூங்காக்கள், அனுபவங்கள் மற்றும் தயாரிப்புகள்
  • வாலுடு திசினி நேரடி-க்கு-நுகர்வோர் & சர்வதேசம்
உள்ளடக்கிய மாவட்டங்கள்
[1][2]
மூடு

திசினி நிறுவனம் அக்டோபர் 16, 1923 அன்று வாலுடு திசினி மற்றும் உரோய் ஓ திசினி ஆகியோரால் திசினி பிரதர்சு காட்டூன் சிடூடியோவாக நிறுவப்பட்டது. இது வாலுடு திசினி சிடூடியோசு மற்றும் வாலுடு திசினி புரொடக்சன்சு ஆகிய பெயர்களில் 1986 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக த வாலுடு திசினி நிறுவனம் பெயரை மாற்றுவதற்கு முன்பாக செயல்பட்டது. இந்த நிறுவனம் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் திசினி பூங்கா போன்ற பல பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றது.

வாலுடு திசினி பிச்சர்சு, வாலுடு திசினி அனிமேசன் சிடூடியோசு, பிக்சர், மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, உலூகசுபிலிம், 20ஆம் சென்சுரி பாக்சு, பாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்சு மற்றும் புளூ சிகை சிடூடியோசு போன்றவை வாலுடு திசினி சிடூடியோசு நிறுவனம் பிரிவில் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.