வறுமைக் கோடு (Poverty line) என்பது வறுமையை வரையறுக்கப் பயன்படும் ஓர் அளவுகோல் ஆகும். குறைந்த பட்ச நுகர்வுத் தரத்தைக் கூட பெற முடியாதவர்கள் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் ஆவார்கள். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தை அடையத் தேவையான குறைந்த பட்ச வருமான வரம்பே வறுமைக்கோடு எனப்படுகிறது.[1] வருமானம் தவிர்த்து ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்தும் வறுமைக் கோடு வரையறுக்கப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வறுமைக் கோடு வரையறைகள் பயன்படுத்தப்படுகின்றன.[2][3]

Thumb
thump
Thumb
thump

குறைந்த பட்ச நுகர்வு

குறைந்த பட்ச நுகர்வு என்பது பின்வரும் வழிகளில் மதிப்பிடப்படுகிறது. ஒருவர் உயிர் வாழ்வதற்குத் தேவையான தானியம், பருப்பு வகைகள், பால், சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றின் குறைந்தபட்ச அளவு தீர்மானிக்கப்படுகிறது. இப்பண்டங்களின் விலையைக் கணக்கில் கொண்டு தேவைப்படுகின்ற குறைந்த பட்சப் பொருள்களை வாங்குவதற்கான பணம் மதிப்பிடப்படுகிறது. இதுவே ஒருவரின் குறைந்த பட்ச நுகர்ச்சிச் செலவாகும். இது ஓர் ஆண்டிற்குக் கணக்கிடப்படுகிறது.[4] இதற்குச் சமமான வருவாயைப் பெறாதவர்கள் அல்லது இதற்குக் குறைவான வருவாயைப் பெறுபவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் ஆவார்கள். இந்தியாவில் குறைந்த பட்ச கலோரி உணவுத் தேவையின் அடிப்படையிலும் வறுமைக் கோட்டை வரையறுத்துள்ளனர். நகர்ப்புறங்களில் வாழும் ஒரு நபருக்குக் குறைந்த பட்சமாக 2,100 கலோரி உணவும், கிராமப் புறங்களில் வாழும் ஒரு நபருக்கு 2,400 கலோரி உணவும் தேவைப்படுகிறது. இவ்வுணவுப் பொருள்களை வாங்கத் தேவையான வருமானத்தைப் பெறாதவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் ஆவார்கள்.[5]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.