வனுவாட்டு
From Wikipedia, the free encyclopedia
வனுவாட்டு (Vanuatu, English: /ˌvɑːnuːˈɑːtuː/ (கேட்கⓘ), பிசுலாமா: Vanuatu), அல்லது வனுவாட்டு குடியரசு (Republic of Vanuatu) என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். எரிமலைகளைக் கொண்டுள்ள இத்தீவுக்கூட்டம், ஆத்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ (1090 மைல்) கிழக்கேயும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ (310மைல்) வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.
வனுவாட்டு குடியரசு Republic of Vanuatu
| |
---|---|
குறிக்கோள்: "Long God yumi stanap" (பிசுலாமா மொழி) "கடவுளினுள் நாம் நிற்கிறோம்"[1][2][3] | |
நாட்டுப்பண்: Yumi, Yumi, Yumi (பிசுலாமா மொழி) நாம், நாம், நாம் | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | போர்ட் விலா |
ஆட்சி மொழி(கள்) | |
இனக் குழுகள் (1999) |
|
மக்கள் | நி-வனுவாட்டு |
அரசாங்கம் | ஒற்றையாட்சி நாடாளுமன்ற குடியரசு |
• குடியரசுத்தலைவர் | பால்டுவின் லோன்சுடேல் |
• பிரதமர் | ஜோ நட்டுமேன் |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
விடுதலை | |
• பிரான்சு, மற்றும் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | 30 சூலை 1980 |
பரப்பு | |
• மொத்தம் | 12,190 km2 (4,710 sq mi) (161வது) |
மக்கள் தொகை | |
• சூலை 2014[4] மதிப்பிடு | 266,937 |
• 2009 கணக்கெடுப்பு | 243,304[5] |
• அடர்த்தி | 19.7/km2 (51.0/sq mi) (188வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | $1.204 பில்லியன்[6] |
• தலைவிகிதம் | $4,916[6] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | $743 மில்லியன்[6] |
• தலைவிகிதம் | $3,036[6] |
மமேசு (2013) | 0.616[7] மத்திமம் · 131வது |
நாணயம் | வனுவாட்டு வாட்டு (VUV) |
நேர வலயம் | ஒ.அ.நே+11 (VUT (வனுவாட்டு நேரம்)) |
வாகனம் செலுத்தல் | வலது |
அழைப்புக்குறி | +678 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | VU |
இணையக் குறி | .vu |
வனுவாட்டுவில் முதலில் மெலனீசிய மக்கள் வாழ்ந்து வந்தனர். 1606 ஆம் ஆண்டில் போர்த்துக்கீச மாலுமி பெர்னான்டசு டி குயிரோசு என்பவரின் தலைமையில் எசுப்பானியக் கப்பல் இங்கு முதன் முதலில் ஐரோப்பாவில் இருந்து எஸ்பிரித்து சான்டோ என்ற மிகப் பெரிய தீவில் தரையிறங்கியது. இத்தீவுக்கூட்டத்தை குடியேற்றக்கால எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் ஒரு பகுதியாக அறிவித்து, இதற்கு "ஆத்திரேலியா டெல் எஸ்பிரித்து சான்டோ" (Austrialia del Espiritu Santo) எனப் பெயரிட்டார்.
1880களில், பிரான்சும், ஐக்கிய இராச்சியமும் இத்தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியை தமது பகுதிகளாக அறிவித்தன. 1906 ஆம் ஆண்டில் இத்தீவுக்கூட்டத்தை பிரித்தானிய-பிரெஞ்சு கூட்டுரிமை மூலம் "நியூ எபிரைட்சு" (New Hebrides) என்ற பெயரில் நிருவகிக்க உடன்பட்டன. 1970களில் நாட்டில் விடுதலைக்கான இயக்கம் வலுப்பெற்று 1980 ஆம் ஆண்டில் இத்தீவுக்கூட்டம் வனுவாட்டு குடியரசு என்ற பெயரில் விடுதலை அடைந்தது.