வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
From Wikipedia, the free encyclopedia
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (Regional Transport Office, RTO) இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டம், 1988இன் பிரிவு 213 (1)இன் கீழ் அமைக்கப்பட்ட மாநில அரசுகளால் நிருவகிக்கப்படும் அலுவலகம் ஆகும். இந்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளை செயற்படுத்துவது இதன் பொறுப்பாகும்.இது மாநில அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்குகின்றது. இந்தியாவில் பதிவு இலக்கத்தகடுகளையும்[1] ஓட்டுனர் உரிமங்களையும்[2] வழங்குகிறது.
விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், வகை ...
துறை மேலோட்டம் | |
---|---|
வகை | Government agency |
மூல அமைப்பு | சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் |
வலைத்தளம் | parivahan |
மூடு
இந்த அலுவலகத்தின் முதன்மை நோக்கங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளவை[3]:-
- குடிமக்களுக்கு அனைத்து சேவைகளையும் திறனுடன் வழங்குதல்;
- வண்டிகள் மீதான அனைத்து வரிகளையும் கட்டணங்களையும் எவ்விதக் கசிவுமின்றி வசூலித்து அரசின் வருமானத்தைப் பெருக்குதல்;
- சாலைப் பாதுகாப்பை கூட்டுதல் மற்றும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குதல்;
- வண்டிகளாலான மாசுபடிதலைக் குறைத்தல்.