வடசீனா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
வடசீனா' (North China, எளிய சீனம்: 华北; மரபுவழிச் சீனம்: 華北; பின்யின்: Huáběi; நேர்பொருளாக "Huaxia-north") என்பது சீனாவின் வடக்கு எல்லையிலுள்ள நிலப்பகுதிகளைக் குறிக்கிறது. இந்த வடசீன நிலப்பகுதியில் பெய்சிங், தியான்ஜின், ஏபெய் மாகாணம், சான்சி, உள் மங்கோலியா ஆகிய நிலப்பகுதிகள் அடங்குகின்றன. வட சீனச் சமவெளி இதன் முக்கிய பகுதியாகும்.[3] மஞ்சள் ஆறு ஓடும் நிலப்பகுதிகளும், அதனால் உண்டாகும் பொருளாதார முன்னேற்றங்களும் சீன பொருளாதார வளத்தைக் கூட்டுகின்றன. சிய்யான் இதில் முக்கிய இடம் வகிக்கிறது. கோபி பாலைவனம் என்பது இங்குள்ள முக்கிய நிலப்பகுதியாகும். ஏனெனில், இப்பகுதியில், பல முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
வடநடு சீனா (North Central China)[சான்று தேவை] என்பது சீனாவின் நிலப்பகுதிகளில் ஒன்றாகும்.[சான்று தேவை] இதற்குரிய குறிப்பிட்ட ஆட்சி எல்லைப் பகுதிகளைச் சீன அரசு வரையறுக்கவில்லை. உயிர் சூழலைப் புரிந்து கொள்ளவும், தட்ப வெப்ப நிலையைப் புரிந்து கொள்ளவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.[யார்?][சான்று தேவை] சீன பௌத்தம் (Han Buddhism) போற்றும் நான்கு முக்கிய மலை முகடுகளில் ஒன்றான (Wutai Shan (3058 m/10,033 ft)) இப்பகுதியில் தான் உள்ளது. 2009 ஆம் ஆண்டிலிருந்து, இச்சிகரம் சீனாவில் உள்ள உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[4] இதன் பரப்பளவு 614,885 சதுர கிலோ மீட்டர்கள்(237,407 sq mi) ஆகும். இதன் சீன நிருவாக நிலவியல் பகுதிகளானசான்சி (23%), சென்சி மாகாணம் (19%), ஏபெய் மாகாணம் (16%), உள் மங்கோலியா (14%), கான்சு (12%), நின்ஷியா தன்னாட்சிப் பகுதி (7%), ஹெனன் (4%), சாண்டோங் (4%), தியான்ஜின் (1%), பெய்சிங் (1%) அடங்கியுள்ளன.[5] சிறுபான்மையினர், தனித்துவமான தாவர வளங்கள் இப்பகுதியில் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.