From Wikipedia, the free encyclopedia
வடக்கு சமர் (Northern Samar) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், கிழக்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் கட்டர்மன் ஆகும். இம்மாகாணம் 1965 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஜோஸ் எல். ஓங், ஜேஆர். (Jose L. Ong, Jr) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,692.93 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக வடக்கு சமர் மாகாணத்தின் சனத்தொகை 632,379 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 34ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 46ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 569 கிராமங்களும், 24 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. தேசிய புள்ளிவிபரத் திணைக்களத்தினால் இம்மாகானமானது இரண்டாம் தர மாகாணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இமாகாணத்தின் 65% ஆன மக்கள் நாட்டுப்புற மக்களாவார்.
வடக்கு சமர் | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | கிழக்கு விசயாசு |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.