![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/89/King_Rama_X_on_the_royal_palaquin%252C_5_May_2019.jpg/640px-King_Rama_X_on_the_royal_palaquin%252C_5_May_2019.jpg&w=640&q=50)
வச்சிரலோங்கோன்
தாய்லாந்து மன்னர் / From Wikipedia, the free encyclopedia
வச்சிரலோங்கோன் (Vajiralongkorn, தாய் மொழி: วชิราลงกรณ; Wachiralongkon), ஆட்சிப் பெயர்: பிரபாத் சோம்தெத் பிரா வஜிர கிளாவோ சாவோ யூ குவா (Phrabat Somdet Phra Vajira Klao Chao Yu Hua), பிறப்பு: 28 சூலை 1952),[2] தாய்லாந்து மன்னர் ஆவார். இவர் மன்னர் பூமிபால் அதுல்யாதெச், அரசி சிறிக்கித் ஆகியோரின் ஒரே மகன் ஆவார். 1972 இல், இவரது 20-வது அகவையில் அவரது தந்தையினால் முடிக்குரிய இளவரசராக அறிவிக்கப்பட்டார். 2016 அக்டோபர் 13 இல் தந்தை இறந்த பின்னர் 2016 திசம்பர் 1 இல் தாய்லாந்து அரசராக முடிசூடினார்.[1][3][4][5] இவரது முடிசூட்டு விழா 2019 மே 4 முதல் 6 வரை நடைபெற்றது.[6] சக்கிரி வம்சத்தின் 10-ஆவது மன்னரான இவர் பத்தாவது இராமா என்றும் அழைக்கப்படுகிறார்.[7]
விரைவான உண்மைகள் வச்சிரலோங்கோன், தாய்லாந்து மன்னர் ...
வச்சிரலோங்கோன் | |
---|---|
![]() | |
தாய்லாந்து மன்னர் | |
ஆட்சிக்காலம் | 13 அக்டோபர் 2016[1] - |
முடிசூட்டுதல் | 4 மே 2019 |
முன்னையவர் | பூமிபால் அதுல்யாதெச் |
பிறப்பு | 28 சூலை 1952 (1952-07-28) (அகவை 71) தாய்லாந்து |
மரபு | மகிதோல் அரண்மனை சக்ரி வம்சம் |
தந்தை | பூமிபால் அதுல்யாதெச் |
தாய் | சிரிக்கித் |
மதம் | பௌத்தம் |
மூடு
விரைவான உண்மைகள் "தாய்" மொழிப் பெயர், தாய் ...
வச்சிரலோங்கோன் | |
"தாய்" மொழிப் பெயர் | |
---|---|
தாய் | มหาวชิราลงกรณ |
RTGS | மகா வஜிரலோங்கோன் |
மூடு