வங்காள மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

வங்காள மாகாணம்map

வங்காள இராஜதானி (Bengal Presidency) பிரித்தானிய இந்தியாவின் மிகப்பெரிய காலனி ஆதிக்கப் பகுதிகளில் ஒன்றாகும். 1757ல் நடைபெற்ற பிளாசி சண்டை மற்றும் 1764ல் நடைபெற்ற பக்சார் சண்டையில் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள், வங்காள நவாபை வெற்றிக் கொண்டு, 22 அக்டோபர் 1765ல் வங்காள இராஜதானி நிறுவப்பட்டது. வங்காள இராஜதானியின் தலைநகரம் கல்கத்தா நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள்
বেঙ্গল প্রেসিডেন্সি
வங்காள மாகாணம்
இராஜதானி பிரித்தானிய இந்தியா

 

22 அக்டோபர் 1765–1947 [[மேற்கு வங்காளம்|]]
 
[[கிழக்கு பாகிஸ்தான்|]]

Thumb

கொடி

Thumb
Location of வங்காள இராஜதானி, பிரித்தானிய இந்தியா
1858ல் பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தின் வரைபடம்
வரலாற்றுக் காலம் காலனி ஆதிக்கம்
  பக்சார் சண்டை, 1764 22 அக்டோபர் 1765
  மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் 1947
தற்காலத்தில் அங்கம் இந்தியா, வங்காளதேசம், பர்மா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா
மூடு

வங்காள இராஜதானி, மேற்கில் தற்கால பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் முதல் கிழக்கில் பர்மா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் பினாங்கு வரை பரவியிருந்தது.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் வங்காள மாகாண ஆளுநரே பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராகவும் செயல்பட்டார்.

1905ல் வங்காளப் பிரிவினை மூலம் வங்காள மாகாணத்திலிருந்து, கிழக்கு வங்காளம் தனியாக பிரிக்கப்பட்டது. 1912ல் மீண்டும் வங்க மொழி பேசும் பகுதிகள் மீண்டும் வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் வங்காள மாகாணத்தின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளை கிழக்கு பாகிஸ்தான் மற்றும் அசாம் எனப் பிரிக்கப்பட்டது.

நிர்வாகச் சீர்திருத்தங்கள் & விரிவாக்கங்கள்

Thumb
வங்காளத்தின் இறுதி நவாபை, 1757ல் பிளாசி சண்டையில் கம்பெனி படைகள் வீழ்த்துதல்
Thumb
விக்டோரியா நினைவிடம்கல்கத்தா
Thumb
1905ல் வங்காள இரயில்வே.[1]

வங்காள மாகாணத்தின் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் (1772-1785) இந்தியத்துணைக் கண்டத்தில் வணிகம் மேற்கொள்வதற்கு வசதியாகவும், பிரித்தானியவின் காலனி ஆதிக்கத்தை விரிவுபடுத்தவும் இராணுவம், காவல் துறை, வருவாய்த் துறைகள் மற்றும் நீதிமன்றங்கள் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பை நிறுவினார்.

வங்காள தலைமை ஆளுநரான காரன்வாலிஸ் (1786 - 1793) காலத்தில் பிரித்தானிய இந்தியாவில் நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஜார்ஜ் பார்லே எனும் சக அதிகாரியின் துணையுடன் சட்டத்தொகுப்பை உருவாக்கினார். சர் வில்லியம் ஜோன்ஸ் என்பரின் உதவியுடன் நீதித் துறையை சீரமைத்தார். குற்றவியல் வழக்குகளில் இந்துச் சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டது.

மாவட்ட அளவில் இருந்த இந்திய நீதிபதிகள் மாவட்ட முன்சிப் என அழைக்கப்பட்டனர். சதர் திவானி அதாலத் எனும் உரிமையியல் மற்றும் சதர் நிசாமத் அதாலத் எனும் குற்றவியல் உயர்நீதிமன்றம் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. ஆட்சிப் பணி நியமனங்களில் தகுதி மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது. காரன்வாலிஸ் 1789ல் கிழக்கிந்தியப் படைகளுடன் மராத்தியர் மற்றும் ஐதராபாத் படைகளுடன் இணைந்து, மைசூரின் திப்பு சுல்தானைக்கு எதிராக கூட்டமைப்பு உருவாக்கி, மூன்றாம் மைசூர் போரில், தோல்வியடைந்த திப்புவிடமிருந்து, பெங்களூர், திண்டுக்கல், மலபார் பகுதிகளையும் மற்றும் போர் நட்ட ஈட்டுத் தொகையும் பெற்றார்.

1905 வங்காளப் பிரிவினை

Thumb
1912ல் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் பகுதியின் வரைபடம்

பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநர் எனப்படும் வைஸ்ராய் கர்சன் பிரபு 1905ல் வங்காளப் பிரிவினை மூலம் வங்காள மாகாணத்திலிருந்து கிழக்கு வங்காளத்தை தனியாக பிரித்து துணைநிலை ஆளுநர் தலைமையில் ஆளப்பட்டது. [2] [3]இப்பிரிவினைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், 1911ல் பிரிக்கப்பட்ட வங்காளப் பகுதிகளை மீண்டும் இணைக்கப்பட்டது.

பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து 12 டிசம்பர் 1911 அன்று தில்லிக்கு மாற்றப்பட்டது.

வங்காள இராஜதானியை பிரித்தல்

வங்காள இராஜதானியை 1911ல் ஒரு பிரித்தானியா ஆளுநரின் கீழ் வங்காள மொழி பேசும் ஐந்து கோட்டங்கள் கொண்ட வங்காள மாகாணம் அமைக்கப்பட்டது. [4]

தற்கால பிகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா பகுதிகளை ஒரு துணைநிலை ஆளுநரின் கீழ் புதிய பிகார் மற்றும் ஒரிசா மாகாணம் நிறுவப்பட்டது.

ஒரு முதன்மை ஆனையாளரின் கீழ் தற்கால அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைக் கொண்டு அசாம் மாகாணம் நிறுவப்ப்பட்டது.

1936ல் பிகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் வங்காள மாகாணம், மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு வங்காளம் எனப் பிரிக்கப்பட்டது. கிழக்கு வங்காளப் பகுதி பாகிஸ்தானின் கிழக்கு பாகிஸ்தானாக விளங்கியது.

இரட்டை ஆட்சி முறை (1920–37)

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் படி, 1921ல் வங்காள மாகாணத்தில் 140 இந்திய உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் உருவானது. [5] இச்சட்டமன்றத்திற்கு வேளாண்மை, மருத்துவ நலம், கல்வி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறைகளில் மட்டும் சட்டம் இயற்றும் வரையறுக்கப்பட்ட பொறுப்பு இருந்தது. மற்ற துறைகள் வங்காள ஆளுநரின் நிர்வாகத்தில் இருந்தது.

1937ம் ஆண்டு முதல் இந்தியா விடுதலை பெறும் வரை, சில கூடுதல் அதிகாரங்களுடன் வங்காள மாகாண சட்டமன்றம் செயல்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.