From Wikipedia, the free encyclopedia
லைடன், தென் ஹாலந்து மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். அருகில் உள்ள சிற்றூர்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள லைடன் நகராட்சியில் 2,54,00 பேர் வசிக்கின்றனர். பழைய ரைன் ஆற்றை ஒட்டியும் டென் ஹாக், ஹார்லெம் நகரங்களுக்கு அருகிலும் லைடன் அமைந்துள்ளது. லைடன் 1575 முதலே ஒரு பல்கலைக்கழக நகரமாக இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டில் ஆகத்தில் இல் லைடன் நகராட்சியின் மக்கள் தொகை 123,856 ஆக இருந்தது. இந் நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளான ஓக்ஸ்ட்ஜீஸ்ட், லீடர்டார்ப், வூர்சோட்டன் மற்றும் ஜூட்டர்வூட் என்பவற்றிலும் சேர்த்து 206,647 மக்கள் வசிக்கின்றனர்.[1] இந்த நகரம் ஹேடில் இருந்து தெற்கே சுமார் 20 கிலோமீற்றர் (12 மைல்) தொலைவிலும், ஆம்ஸ்டர்டாமில் இருந்து அதன் வடக்கே சுமார் 40 கிமீ (25 மைல்) தொலைவிலும் ஓடன் ரிஜனில் அமைந்துள்ளது. காக் ஏரிகளின் ( காகர் ப்ளாசென் ) பொழுதுபோக்கு பகுதி லைடனின் வடகிழக்கில் அமைந்துள்ளது.
1575 ஆம் ஆண்டு முதல் ஒரு பல்கலைக்கழக நகரமாக இருந்து வருகிறது. லைடன் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவின் மிக முக்கியமான அறிவியல் மையங்களில் ஒன்றாகும். லைடன் இந்த நகரம் முழுவதிலும் பல்கலைக்கழக கட்டிடங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. இந் நகரில் உலகம் முழுவதிலுமிருந்து பல மாணவர்கள் வருகை தந்து சர்வதேச சூழ்நிலையை அளிக்கின்றனர். பல முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகள் இங்கு இடம் பெற்றுள்ளன. லைடன் கண்டுபிடிப்புகளின் நகரமாக திகழ்கின்றது. இந்த நகரத்தில் நெதர்லாந்தின் பழமையான பல்கலைக்கழகமான லைடன் பல்கலைக்கழகம் மற்றும் லைடன் பல்கலைக்கழக மருத்துவ மையம் அமைந்து உள்ளன. லைடன் பல்கலைக்கழகம் ஐரோப்பாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது பதிமூன்று நோபல் பரிசு வாகையாளர்களை வழங்கிய பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் ஐரோப்பிய ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் லீக்கில் உறுப்புரிமை பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். அனைத்து சர்வதேச கல்வி தரவரிசைகளிலும் உயர்ந்த இடத்தில் உள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தின் பழமையான பல்கலைக்கழகத்தின் இருப்பிடமான ஆக்ஸ்போர்டுக்கு நிகரானதாகும். லைடன் பல்கலைக்கழகம் மற்றும் லைடன் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்சஸ் ஆகியவை சுமார் 35,000 மாணவர்களைக் கொண்டுள்ளன. நவீன அறிவியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லைடனில் போயர்ஹேவுடன் தொடங்கியது. வ
லைடன் அறிவியலில் மட்டுமல்லாமல் கலைகளிலும் வளமான கலாச்சார பாரம்பரியம் கொண்ட நகரம் ஆகும். உலகின் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவரான ரெம்ப்ராண்ட் லைடனில் பிறந்து கல்வி கற்றார். பிரபலமான ஓவியர்களான லூகாஸ் வான் லேடன் , ஜான் வான் கோயன் மற்றும் ஜான் ஸ்டீன் என்போர் லைடனை சேர்ந்தவர்கள்.
கிழக்கில் லைடனுக்குள் நுழையும் ஓட் ரிஜனின் ஆற்றின் இரண்டு கிளைகளும் நகரின் மையத்தில் ஒன்றுபடுகின்றன. மேலும் ஏராளமான சிறிய கால்வாய்கள் நகரில் வெட்டப்பட்டுள்ளன. நகரின் மேற்குப் பகுதியில், ஹார்டஸ் தாவரவியல் மற்றும் பிற தோட்டங்களைச் சூழ சிங்கில் கால்வாய் அமைந்துள்ளது. சிறிய மான்களை உள்ள லீட்ஸ் ஹவுட் பூங்கா ஓக்ஸ்ட்ஜீஸ்டுடன் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ளது. வான் டெர் வெர்ஃப் பூங்காவிற்கு மேயர் பீட்டர் அட்ரியான்ஸ் என பெயரிடப்பட்டது . வான் டெர் வெர்ஃப் என்பவர் 1574 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களுக்கு எதிராக நகரத்தை பாதுகாத்தார். அந்நேரத்தில் நகரில் ஏற்பட்ட பஞ்சத்தால் பலர் இறந்தனர். 1807 ஆம் ஆண்டில் துப்பாக்கியால் நிரப்பப்பட்ட ஒரு கப்பல் தற்செயலாக வெடித்ததால் பூங்காவிலும் நகரிலும் பெருமளவிலான சேதம் ஏற்பட்டது.
17 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதால், 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டு நகர மையத்தின் பெரும்பகுதி இன்னும் அப்படியே உள்ளது. இது நெதர்லாந்தில் 17 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பெரிய நகர மையமாகும். நெதர்லாந்தின் மிகப்பெரிய நகர மையம் ஆம்ஸ்டர்டாம் ஆகும்.
மையத்தில் உள்ள நூறு கட்டிடங்கள் கவிதைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 1992 ஆம் ஆண்டு முதல் சுவர் கவிதை திட்டத்தின் ஒரு பகுதி செயலில் உள்ளது. இன்னும் நடைப்பெறுகின்றது.[2][3]
நகர மையத்தில் லைடன் பல்கலைக்கழகத்தால் பயன்பாட்டில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. 16 ஆம் நூற்றாண்டின் அகாதமி கட்டிடம் கான்வென்ட்டில் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் கிழக்கு இந்திய மொழிகள், இனவியல் மற்றும் புவியியல் ஆகியவற்றிற்கான தேசிய நிறுவனம், 1587 இல் நிறுவப்பட்ட தாவரவியல் பூங்காக்கள் ஆய்வகம் (1860), பழங்கால அருங்காட்சியகம் ( ரிஜக்ஸ்முசியம் வான் ஓடெடன் ) மற்றும் இனவியல் அருங்காட்சியகம் என்பன அடங்கும். லைடன் பல்கலைக்கழக நூலகத்தில் பல சிறப்புத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவையாக திகழ்கின்றன. அவற்றில் டச்சு இலக்கிய சங்கம் (1766) மற்றும் வார்ப்புகள் மற்றும் வேலைப்பாடுகளின் தொகுப்புகள் ஆகும். பல்கலைக்கழகம் அறிவியல் துறைகளுக்கு இடமளிக்கும் வகையில் நகரின் புறநகரில் லைடன் பயோ சயின்ஸ் பூங்கா கட்டப்படுள்ளது. [சான்று தேவை]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.