லூவிய மொழி
From Wikipedia, the free encyclopedia
லூவிய மொழி (Luwian language) அல்லது லூவியம் என்பது, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் அனத்தோலியக் கிளையைச் சேர்ந்த ஒரு தொல்பழங்கால மொழி அல்லது மொழித் தொகுதி. எழுதப்பயன்பட்ட எழுத்துமுறையின் அடிப்படையில் இரண்டுவகையான லூவியத்தை அடையாளம் கண்டுள்ளனர். ஒன்று ஆப்பெழுத்து முறையிலும், மற்றது படவெழுத்து முறையிலும் எழுதப்பட்டவை. எனினும், இவை வெவ்வேறு எழுத்து முறைகளில் எழுதப்பட்ட ஒரே மொழியா அல்லது இரண்டு மொழிகளா என்பதில் ஆய்வாளரிடையே ஒருமித்த கருத்து இல்லை.
விரைவான உண்மைகள் லூவியம், நாடு(கள்) ...
லூவியம் | |
---|---|
லூவிலி | |
லூவியப் படவெழுத்து | |
நாடு(கள்) | இட்டைட்டுப் பேரரசு, அர்சாவா, புது-இட்டைட்டு இராச்சியம் |
பிராந்தியம் | அனத்தோலியா, வடக்கு சிரியா |
Extinct | கிமு 600 அளவில் |
இந்திய-ஐரோப்பியம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | Either: xlu — ஆப்பெழுத்து லூவியம் hlu — படவெழுத்து லூவியம் |
மொழிசார் பட்டியல் | xlu ஆப்பெழுத்து லூவியம் |
hlu படவெழுத்து லூவியம் | |
மொழிக் குறிப்பு | luvi1235[1] |
லூவிய மொழிப் பரம்பல் | |
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம். |
மூடு
அனத்தோலியாவில் இருந்த வேறு பல மொழிகள் லூவிய மொழியைப் போன்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது, இம்மொழிகள் ஆப்பெழுத்து லூவியம், படவெழுத்து லூவியம் என்பவற்றுடன், தமக்குரிய லூவியத்தின் கிளைகளைச் சேர்ந்தவை என்பதைக் காட்டுகின்றன. சில மொழியியலாளர்கள் இக்கிளையை "லூவியக் குழு" எனப் பெயரிட்டுள்ளனர்.