![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/Lumut%252C_Perak%252C_Malaysia_-_panoramio.jpg/640px-Lumut%252C_Perak%252C_Malaysia_-_panoramio.jpg&w=640&q=50)
லூமுட்
மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம். / From Wikipedia, the free encyclopedia
லூமுட் (மலாய்:Lumut; ஆங்கிலம்:Lumut; சீனம்:红土) என்பது மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை நகரம். மலேசியாவின் அரசக் கடல் படை தளம் இங்குதான் அமைந்து உள்ளது.[1] மலேசியாவில் நன்கு அறியப்பட்ட சுற்றுலாத் தளமான பங்கோர் தீவிற்கு, இங்கு இருந்துதான் படகின் மூலமாகச் செல்ல வேண்டும்.
விரைவான உண்மைகள் லூமுட்Lumut பேராக், நாடு ...
![]() லூமுட் படகுத் துறை | |
![]() | |
ஆள்கூறுகள்: 4°13′N 100°37′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | கி.பி.1800 |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 31,880 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மூடு
முன்பு காலத்தில் லூமுட் நகரம் ஒரு சிறு மீன்பிடி கிராமமாக இருந்தது. தற்சமயம் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நகரம் கடல் முத்துச் சிப்பிகளுக்கும்; பவளக் கைவினைப் பொருட்களுக்கும் பெயர் பெற்று விளங்குகிறது.
ஈப்போ மாநகரில் இருந்து 77 கி.மீ. (48 மைல்); சித்தியவான் நகரில் இருந்து 12 கி.மீ. (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[2]