![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/Lumbini_districts.png/640px-Lumbini_districts.png&w=640&q=50)
லும்பினி மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
லும்பினி மண்டலம் (Lumbini zone) (நேபாளி: लुम्बिनी अञ्चलகேட்கⓘ) தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தில், மாநில எண் 5-இல் அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் புத்வால் நகரம் ஆகும். [1] பண்டைய சாக்கியர்களும், கோலியர்களும் இம்மண்டலத்தில் வாழ்ந்தனர். கௌதம புத்தர் பிறந்த பண்டைய லும்பினி நகரம் மற்றும் கபிலவஸ்துவை யுனெஸ்கோ நிறுவனம், உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.[2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/Lumbini_districts.png/640px-Lumbini_districts.png)