லால் கிருஷ்ண அத்வானி
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
லால் கிருஷ்ண அத்வானி (பிறப்பு நவம்பர் 8, 1927, கராச்சி) பாரதிய ஜனதா கட்சி நிறுவன தலைவர்களில் ஒருவர் ஆவார்.அத்வானி ஆர்.எஸ்.எஸ் ஊழியர். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் 7வது துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. 2015 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் தேதி அன்று எல்.கே. அத்வானிக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் லால் கிருஷ்ண அத்வானி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ...
லால் கிருஷ்ண அத்வானி | |
---|---|
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் ஜூன் 2004 – டிசம்பர் 2009 | |
முன்னையவர் | சோனியா காந்தி |
பின்னவர் | சுஷ்மா சுவராஜ் |
7வது இந்திய துணைப் பிரதமர் | |
பதவியில் ஜூன் 29 2002 – மே 20 2004 | |
பிரதமர் | அடல் பிஹாரி வாஜ்பாய் |
முன்னையவர் | தேவிலால் |
பின்னவர் | காலியாக உள்ளது |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் மார்ச் 19 1998 – ஜூன் 28 2004 | |
பிரதமர் | அடல் பிஹாரி வாஜ்பாய் |
முன்னையவர் | இந்திரஜித் குப்தா |
பின்னவர் | சிவ்ராஜ் பாட்டில் |
இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் | |
பதவியில் மார்ச் 24 1977 – ஜூலை 15 1979 | |
பிரதமர் | மொரார்ஜி தேசாய் |
முன்னையவர் | வித்தியா சரண் சுக்லா |
பின்னவர் | வித்தியா சரண் சுக்லா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 8, 1927 (1927-11-08) (அகவை 96) கராச்சி, பிரித்தானிய இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | கம்லா அத்வாணி (தி:1965-இ:2016) |
பிள்ளைகள் | பிரதிபா ஆட்வாணி, ஜெயந்த் ஆட்வாணி |
முன்னாள் கல்லூரி | மும்பை பல்கலைக்கழகம் |
வேலை | வழக்கறிஞர் |
இணையத்தளம் | http://blog.lkadvani.in |
மூடு