![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/Keoti_falls_in_Rewa%252C_Madhya_Pradesh.jpg/640px-Keoti_falls_in_Rewa%252C_Madhya_Pradesh.jpg&w=640&q=50)
ரேவா
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் / From Wikipedia, the free encyclopedia
ரேவா (Rewa), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், தென்கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் எல்லையை ஒட்டி அமைந்த ரேவா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். பகேல்கண்ட் பிரதேசத்தில் அமைந்த ரேவா நகரம், மாநிலத் தலைநகரான போபால் நகரத்திலிருந்து 420 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜபல்பூரிலிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. விந்திய மலைத்தொடர் ரேவா மாவட்டத்தின் நடுவில் உள்ளது. வெள்ளைப் புலிகள் ரேவா மாவட்ட காட்டில் உள்ளன.[3]
விரைவான உண்மைகள் ரேவா, நாடு ...
ரேவா | |
---|---|
நகரம் | |
![]() ரேவா நகரத்தில் கியோட்டி அருவி | |
ஆள்கூறுகள்: 24.53°N 81.3°E / 24.53; 81.3 | |
நாடு | ![]() |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | ரேவா |
தோற்றுவித்தவர் | விக்கிரமாதித்தியா சிங் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ரேவா நகராட்சி |
பரப்பளவு | |
• நகரம் | 69 km2 (27 sq mi) |
• மாநகரம் | 146 km2 (56 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 22வது [2] |
ஏற்றம் | 304 m (997 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 2,35,654 |
• தரவரிசை | 8வது[2] |
• அடர்த்தி | 3,400/km2 (8,800/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 486001 HPO 486002, 486003 |
தொலைபேசி குறியீடு | 07662 |
ஐஎசுஓ 3166 குறியீடு | 3166-2:IN |
வாகனப் பதிவு | MP-17 |
இணையதளம் | www |
மூடு