ரேபரேலி மாவட்டம் (இந்தி: रायबरेली ज़िला, உருது: رائے بریلی ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் ரேபரேலி நகரம் ஆகும். இம்மாவட்டம் லக்னௌ கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது.
ரேபரேலிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | லக்னௌ |
தலைமையகம் | ரேபரேலி |
பரப்பு | 4,609 km2 (1,780 sq mi) |
மக்கட்தொகை | 3,404,004 (2011) |
மக்களவைத்தொகுதிகள் | ரேபரேலி |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பொருளாதாரம்
2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ரேபரேலி மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1]
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ரேபரேலி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,404,004.[2] இது தோராயமாக பனாமா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 97வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 739 inhabitants per square kilometre (1,910/sq mi).[2] மேலும் ரேபரேலி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 18.51%.[2] ரேபரேலி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் ரேபரேலி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.04%.[2]
மொழிகள்
இம்மாவட்டத்தில் அவதி மொழி பெரும்பான்மையாக பேசப்படுகிறது. இம்மொழியை 38 மில்லியன் மக்கள் அவத் பகுதியில் பேசுகின்றனர்[4]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.